/* */

தமிழகத்தில் சர்வதேச தரத்தில் 5 ரயில்வே ஸ்டேஷன்கள்புனரமைப்பு :அதிகாரிகள் தகவல்

5 railway station to be renovate international level தமிழகத்தில் 5 ரயில்வே ஸ்டேஷன்கள் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

தமிழகத்தில் சர்வதேச தரத்தில்  5   ரயில்வே ஸ்டேஷன்கள்புனரமைப்பு  :அதிகாரிகள் தகவல்
X

இன்டர்நேஷனல் தரத்துக்கு மாற உள்ள  மதுரை ரயில்வே ஸ்டேஷன் (பைல்படம்)

5 railway station to be renovate international level




5 railway station to be renovate international level

இந்தியாவில் வளர்ந்து வரும்தொழில் நுட்ப வளர்ச்சியால் ரயி்ல்வே துறையும் அபரித வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் பல தொழில்நுட்பங்களை புகுத்த திட்டமிட்டுள்ளது.

ரயில்வேதுறை சார்பில் ரயில்வே மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 5 ரயில்வே ஸ்டேஷன்கள் விரைவில் புதுப்பிக்கப்பட திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தின் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் பயணியர்களின் அடிப்படை வசதி உள்ளிட்ட வசதிகளை இன்டர்நேஷனல் தரத்துக்கு உயர்த்தும் வகையில் மறுசீரமைப்பு திட்டம் என்றதொரு திட்டத்தினை ரயில்வே துறையானது செயல்படுத்தி வருகிறது.

5 railway station to be renovate international level



5 railway station to be renovate international level

இத்திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 14 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இதற்கான பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலமாக ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ரயில்வே ஸ்டேஷனின் கூரையினை விரிவுபடுத்துதல், காத்திருப்பு அறைகளை வசதியாக அமைத்தல், கேண்டீன்,குழந்தைகள் விளையாட இடம், உள்ளூர் பொருட்களின் விற்பனை மையம் உள்ளிட்ட வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

5 railway station to be renovate international level


5 railway station to be renovate international level

5 ரயில்வே ஸ்டேஷன்கள்

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கும்போது, இந்திய ரயில்வே துறையின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் நாடுமுழுவதும் பல ரயில் வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தினைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் கீழ் எழும்பூர், ராமேஸ்வரம், காட்பாடி,மதுரை, கன்னியாகுமரி ஆகிய 5 ரயில்வே ஸ்டேஷன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அந்நிறுவனங்கள் விரைவில் தங்களுடைய கட்டுமான பணிகளைத் துவங்க தயாராகி வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் இத்திட்டத்தின் பணிகளை முடிக்க திட்டமி்ட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

இந்தியாவினைப் பொறுத்தவரை ரயில்வே துறையானது வருவாய் ஈட்டக்கூடிய துறையாக விளங்கிவருகிறது. பல ரயில்வே ஸ்டேஷன்களில் பயணியர்கள் உட்கார நல்ல சேர் வசதிகள் கூட இல்லாமல் உள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக தாலுகா அளவிலான ரயில்வே ஸ்டேஷன்களில் போதுமான அளவுகழிவறை, பயணியர்கள் காத்திருப்பு அறை, மற்றும் உணவகம், பயணிகள் அமர்வதற்கான சேர் உள்ளிட்ட வசதிகளையும் மேம்படுத்த ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 railway station to be renovate international level


5 railway station to be renovate international level

தமிழகத்தில் உள்ள பல ரயில்வேஸ்டேஷன்களில் துாய்மையாக வைத்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பல இடங்களில் கழிப்பறைகளின் துாய்மையானது முகம் சுளிக்க வைப்பதாகவே உள்ளது. இதுபோன்ற ரயில்வே ஸ்டேஷன்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து இப்பிரச்னைகளை சரி செய்யவேண்டும் எனவும் கோரியுள்ளனர். பல ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பாரத்தின் கூரைகள் சரியில்லை. அதேபோல்வ ண்டி நிற்கும் இடத்தில் போதியகூரைகள் இல்லாததால் பயணிகள் வெயில், மழையினால் பாதிப்படைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனை ரயில்வே துறை நேரில் ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கையினையும் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Nov 2022 4:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!