/* */

சென்னை மெட்ரோ இரயில்கள் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.21.16 கோடியில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் மெட்ரோ இரயில்கள் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.21.16 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சென்னை மெட்ரோ இரயில்கள் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.21.16 கோடியில் ஒப்பந்தம்
X

சென்னை மெட்ரோ ரயில்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் மெட்ரோ இரயில்கள் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.21.16 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

​சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-1-ல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர்பணிமனையில் மெட்ரோ இரயில்களை பராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம்(PPIO) மற்றும் பணிமனை கட்டுப்பாட்டு சேவைகளுக்கான ஒப்பந்தம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா)பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ.21.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்திற்கு 09.11.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்புகள் மற்றும்இயக்கம்) மற்றும் MEMCO அசோசியேட்ஸ் (இந்தியா) பிரைவேட் நிறுவனத்தின் பொது மேலாளர் -மெட்ரோ திட்டம் ஜி.வீராகுமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

​கட்டம்-1-ல் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ இரயில்களைபராமரிப்பது, முன்னேற்ற திட்டமிடல் மற்றும் விசாரணை அலுவலகம் (PPIO) மற்றும் பணிமனைகட்டுப்பாட்டு மையம் பராமரிப்பது போன்றவை இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.

​இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்ஏ.ஆர்.ராஜேந்திரன் (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), இணை பொது மேலாளர் சி.பாலமுருகன், (தொடர்வண்டி மற்றும் இயக்கம்), மெம்கோவின் முதன்மை செயல் அதிகாரி ஜோஷ்வா ராஜ்குமார், சென்னைமெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் மெம்கோவின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 30 Dec 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  2. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  4. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  5. வால்பாறை
    வால்பாறையில் சுற்றுலா வாகனம் பாறையில் மோதி விபத்து: 31 பேர் படுகாயம்
  6. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  7. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  8. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  10. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு