/* */

மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி மையம்-செயல்படுத்த வேண்டும்-அமைச்சர் டெல்லிபயணம்

செங்கல்பட்டு-பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக தங்கம் தென்னரசு டெல்லி செல்கிறார்

HIGHLIGHTS

மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தி மையம்-செயல்படுத்த வேண்டும்-அமைச்சர் டெல்லிபயணம்
X

ஹெச்.எல்.எல். பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையம்

செங்கல்பட்டில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று டெல்லி செல்கிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், ஹெச்.எல்.எல். பயோடெக் என்ற தடுப்பூசி உற்பத்தி மையம் அமைந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி மையம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக ஒரு தடுப்பூசியைக்கூடத் தயாரிக்காமல் வெறும் கட்டடமாக நின்றுகொண்டிருக்கிறது. சென்னையை அடுத்த செங்கல்பட்டில் அமைந்துள்ளது ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம். 2012-ம் ஆண்டு மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்தபோது, மத்திய அரசின் 100 சதவிகித மானியத்துடன் இந்த மையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கின

தமிழக அரசின் சார்பில் 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசின் சார்பில் ரூ.594 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டில் கட்டுமானப் பணிகள், மெஷின்கள் நிறுவுவது என அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன. இந்த நிறுவனமானது மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் லைஃப்கேர் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது

இந்த மையத்தில் 215 பேர் பணியில் இருந்தனர். தற்போது வெறும் 95 பேர்தான் பணியாற்றுகின்றனர். பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுப்பதில்லை. பத்தாயிரம் ரூபாய் ஸ்டைஃபன்ட் மட்டுமே வழங்கப்படுகிறது.

``ரூ.500 கோடிக்கும் மேல் முதலீடு போட்டு தொடங்கப்பட்ட இந்த உற்பத்தி மையத்தில் ஒரு தடுப்பூசிகூட இதுவரை உற்பத்தி செய்யப்படவில்லை

கோவிட்-19 தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைவருக்கும் தேவையான தடுப்பூசிகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுபோன்ற கடினமான சூழலில் 585 மில்லியன் டோஸ் தயாரிக்கும் திறன் வாய்ந்த உற்பத்தி மையத்தை செயல்படுத்தாமல் வைத்திருப்பது வேதனையளிக்கிறது

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் வலுப்பெற்ற நிலையில்,முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தடுப்பூசி உற்பத்தியை உடனடியாக தொடங்க, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்ட முதல்வர், உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, மத்திய அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்துவதற்காக, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வியாழக்கிழமை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Updated On: 27 May 2021 4:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?