/* */

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கீரப்பாக்கம் ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், மக்களுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
X

 "மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில்,  நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில், கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியம்மன் கோயில் தெரு, விநாயகபுரம் மக்களுக்கு "மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில், நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கீரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றியக்குழு துணை பெருந்தலைவருமான ஆராமுதன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய குழு உறுப்பினர் விஜயகுமார், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் பாபு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளங்கோவன்,. ஊராட்சி துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Nov 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...