/* */

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர்

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் பெண் வேட்பாளரை ஒருமையில் இழிவாக பேசிய திமுகவினர்
X
 செங்கல்பட்டு அருகே வேன்பாக்கம் அரசுப் பள்ளியில் பெண்வேட்பாளரை ஒருமையில் பேசிய திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது எடுத்தப்படம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காட்டாங்குளத்தூர். மதுராந்தகம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று காலை ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வேன்பாக்கம் அரசினர் பள்ளியில் தேர்தல் மையத்தில் மாவட்ட 5வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மோகனப்பிரியா என்பவர் வாக்களிக்க வந்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த திமுகவினர் மோகனப் பிரியாவை பெண் வேட்பாளர் என்றும் கூட பார்க்காமல் ஒருமையில் இழிவாக பேசினர். அப்போது அங்கிருந்த பெண்கள் எதிர்த்து கேட்க மீண்டும் திமுக நிர்வாகி திருமலை என்பவரின் அண்ணன் மகன் தமிழ் என்பவன் பெண்களை மீண்டும் ஒருமையில் பேசினார்.

இதனை அடுத்து இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்காக இருந்த காவலர்களும் வேடிக்கை பார்த்தபடி இருந்தனர். இதன் காரானமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் இது குறித்து பெண் வேட்பாளர் மோகனப்பிரியா கூறியதாவது, இன்று காலை முதலே திமுகவினர் ஏராளமானோர் வாக்கு செலுத்தும் மையத்தில் ஒன்று கூடி பெண்களையும் பெண் வேட்பாளர்களையும் ஒருமையில் பேசி வருகின்றனர்.

இது பெண் வர்கத்துக்கே இழிவான செயலாகும் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகள் திமுகவினர் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 9 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்