/* */

சிவசங்கர் பாபாவுக்கு 2வது போக்சாேவில் ஜாமீன்: செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு

சிவசங்கர் பாபாவுக்கு இரண்டாவது போக்சாேவில் ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு.

HIGHLIGHTS

சிவசங்கர் பாபாவுக்கு 2வது போக்சாேவில் ஜாமீன்: செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
X

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது, அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின்படி, 3 க்கும் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் மீதான முதல் வழக்கு செங்கல்பட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிவசங்கர் பாபா, நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த 15 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதி தமிழரசி முன்னாள் மாணவிகள் அளித்ததின் பேரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவுக்கு இன்று ஜாமீன் வழங்கி போக்சாே நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Updated On: 26 Oct 2021 12:30 PM GMT

Related News