/* */

செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்கா பறிமுதல்

செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த 15 டன் குட்கா பறிமுதல்
X

கோப்பு படம்

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த ரயில் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் சந்தேகத்திற்கிடமான முறையில் லாரிகள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் தொடர்ந்து அப்பகுதியை நோட்டமிட்டு வந்தனர்.

இந்நிலையில் கர்நாடகத்தைச் சேர்ந்த கனரக வாகனம் சந்தேகத்திற்கு இடமான வகையில் அப்பகுதியில் நின்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குடோனில் சோதனை செய்ததில், சுமார் 50 லட்சம் மதிப்பிலான 15 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், குடோனில் இருந்த படப்பை மணிகண்டன், மாரிமுத்து, பெங்களூரை சேர்ந்த பெருமாள், ஆனந்த், ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த நரேஷ் குமார், டாம்மரம், ஆகிய ஆறு நபர்களை கைது செய்தனர். இந்த குட்கா பொருட்கள் அனைத்தும் பாடி கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.

இவர் மீது குன்றத்தூர், அம்பத்தூர், ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்துள்ளார். கூடுவாஞ்சேரியில் இவருக்கு சொந்தமான குடோனில் கடந்த 15-நாட்களுக்கு முன்பு 10-டன் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!