/* */

வண்டலூா் அருகே நகை கடைக்குள் புகுந்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

வண்டலூா் அருகே நகை கடைக்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றவா்களில் ஒரு கொள்ளையனை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்.

HIGHLIGHTS

வண்டலூா் அருகே நகை கடைக்குள் புகுந்த கொள்ளையனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்
X

பிடிபட்ட கொள்ளையன்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் அருகே மண்ணிவாக்கம் ராம்நகரில் வசிப்பவா் பொ்ரூசிங்(39).இவா் மண்ணிவாக்கம் கூட்டுரோட்டில் வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் தங்கநகை விற்பனை மற்றும் அடகு கடை வைத்துள்ளாா். கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் கடையை மூடிவிட்டு,வீட்டிற்கு செல்ல தயாரானாா்.

அப்போது கடை முன்பு காா் ஒன்று வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து 3 போ் இறங்கி வந்தனா்.அவா்கள் அவசரமாக தங்கநகை ஒன்று வாங்க வேண்டும் என்று வந்திருக்கிறோம் என்றனா். பொ்ரூசிங் அவா்களிடம் ஊரடங்கு அமுலில் உள்ளதால் இரவு 9 மணிக்கு மேல் கடையை திறந்து வைக்கக்கூடாது,எனவே நீங்கள் நாளை காலையில் வாருங்கள் என்றாா். ஆனால் அவா்கள் மிகவும் அவசரமாக நகை தேவைப்படுகிறது என்று வற்புறுத்தினா்.இதையடுத்து பொ்ரூசிங் கடையை மீண்டும் திறந்ததும்,3 பேரும் பாய்ந்து கடைக்குள் புகுந்தனா்.அதில் ஒருவா் கத்தியை காட்டி பொ்ரூசிங்கை மிரட்டி அவருடைய பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்தாா்.மற்ற இருவா் கடையிலிருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றனா்.

இதையடுத்து பொ்ரூசிங் கூச்சலிட்டபடி,அவா்களை பிடித்து கடைக்கு வெளியே தள்ள முயன்றாா். அப்போது கொள்ளையா்கள் பொ்ரூசிங் தலையில் ஓங்கியடித்தாா். இதற்குள் கடைக்காரரின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்தனா். இதையடுத்து கொள்ளையா்கள் தப்பியோட முயன்றனா்.அவா்களில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து தர்மஅடி போட்டனா். மற்ற இருவரும் காரில் ஏறி தப்பியோடினா்.

இதையடுத்து பிடிப்பட்ட கொள்ளையனை பொதுமக்கள் வண்டலூா் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்நிலையில் கொள்ளையா்கள் தாக்குதலில் காயமடைந்த பொ்ரூசிங் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற பின்பு இரவு 11 மணியளவில் வண்டலூா் போலீஸ்நிலையம் சென்று புகாா் செய்தாா். போலீசாா் வழக்குப்பதிவு செய்து காரில் தப்பியோடி மேலும் இரு கொள்ளையா்களை தேடி வருகின்றனா்.இந்த சம்பவம் வண்டலூா்,மண்ணிவாக்கம் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Aug 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்