/* */

வணிகர்களை இழிவுப்படுத்தியதாக கூறி யூடியூபர்களை கண்டித்து போராட்டம்

செங்கல்பட்டில் வணிகர்களை இழிவுப்படுத்தியதாக கூறி யூடியூபர்களை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

வணிகர்களை இழிவுப்படுத்தியதாக கூறி யூடியூபர்களை கண்டித்து போராட்டம்
X

செங்கல்பட்டில் வணிகர்களை இழிப்புப்படுத்தியதாக கூறி யூடியூபர்களை கண்டித்து வியாபாரிகள் சங்க பேரவையினர் போராட்டம் நடத்தினர்.

மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் தனியாக பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் லாக்டவுன் 2.0 என இவர்கள் வெளியிட்ட யூடியூப் வீடியோவை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

வணிகர்களை அந்த வீடியோவில் மோசடிக்காரர்களாக சித்தரித்துள்ளதாகவும், லாக்டவுனை பயன்படுத்தி விலை வாசியை உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பதாக வெளியான வீடியோ தொடர்பாக கோபி மற்றும் சுதாகரை வணிகர்கள் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வியாபாரிகள் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட தெரியாமல் இஷ்டத்துக்கு இப்படி வீடியோ வெளியிடுவது கண்டனத்துக்குரியது என்றும் கொதித்துள்ளனர்.

இந்த நிலையில் மிருகத்தை போல இருவரையும் சித்தரித்து போஸ்டர் ஒட்டி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை அமைப்பினர் அச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருன்குமார் தலைமையில், கோபி மற்றும் சுதாகர் ஆகியோரை கண்டித்து வன்மையான கண்டனங்களை பதிவு செய்தனர்.

Updated On: 22 Jun 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்