/* */

ஃபோர்டு தொழிற்சாலை மூடல்: மத்திய, மாநில அரசுகள் தலையீட மார்க்சிஸ்ட் வேண்டுகோள்

ஃபோர்டு தொழிற்சாலை மூடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு செய்து தடுத்து நிறுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

HIGHLIGHTS

ஃபோர்டு தொழிற்சாலை மூடல்:  மத்திய, மாநில அரசுகள் தலையீட மார்க்சிஸ்ட் வேண்டுகோள்
X

போர்ட் நிறுவனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலைநகர், கீழக்கரணை பகுதியில் அமெரிக்காவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனம் 1994 - ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி கார் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவியது .

சுமார் 3000 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக அன்றைய அரசுகள் அறிவித்தன . 1998 - ம் ஆண்டு முதல் உற்பத்தியை துவக்கி கடந்த 24 ஆண்டுகளில் மிகப் பெரும் அளவிற்கு லாபத்தை ஈட்டிச் சென்றுள்ளது . குறைந்த விலையில் விவசாய நிலம் , நிலத்தடி நீர் , தடையில்லா மின்சாரம் , உற்பத்தி வரிச் சலுகை என அரசின் பல்வேறு சலுகைகளை பெற்று கொழுத்த லாபத்தை அடைந்துள்ளது .

தற்போது கடந்த 10 ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என அறிவித்து தொழிற்சாலையை மூடுவதற்கு ஃபோர்டு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது . இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது இத்தொழிற்சாலையில் நிரந்தரமாக 2650 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர் . சுமார் 500 பேர் பயிற்சி தொழிலாளர்களாகவும், 700 க்கும் மேற்பட்ட நிர்வாக பணியாளர்களும் , 2000 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் என பணிபுரிந்து வருகின்றனர் .

மேலும், இந்நிறுவனத்திற்கு துணைத் தொழில் நிறுவனங்களாக 200க்கும் மேற்பட்ட சிறு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன . இவற்றில் 20 முதல் 100 பேர் பணியாற்றி வருகின்றனர் . இவர்களோடு உணவு விடுதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யும் தொழிலாளர்களாக பல்லாயிரம் பேர் பணி செய்து வருகின்றனர் . ஆக ஒட்டு மொத்தமாக சுமார் 20 ஆயிரம் பேர் இத்தொழிற்சாலையை சார்ந்துள்ளனர் .

இவர்களின் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது . எனவே, மத்திய அரசும், மாநில அரசும் இப்பிரச்சனையில் போர்க்கால அடிப்படையில் தலையிட்டு ஃபோர்டு தொழிற்சாலை தொடர்ந்து செயல்படுவதற்கும், பணி புரியும் தொழிலாளர்களுக்கு பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் , ஃபோர்டு கார் தொழிற்சாலை உள்ளிட்ட இதர தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்களின் வேலை பாதுகாத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.

Updated On: 11 Sep 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?