/* */

செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்க்கும் அரசு பேருந்துகள், பொதுமக்கள் அலட்சியம்

செங்கல்பட்டு அரசு பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகள் பயணம் செய்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் கொரொனாவை வரவேற்க்கும் அரசு பேருந்துகள், பொதுமக்கள் அலட்சியம்
X

செங்கல்பட்டில் கொரோனா விதிகளை மீறி, தொற்றின் பயம் அறியாமல் ,அரசு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான தளர்வுகள் அளிக்கப்பட்டு கடந்த இரு தினங்களாக அரசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

50 சதவிகித இரு கைகளுடன் தனி மனித இடைவெளியையை பின் பற்றி பயணிகள் பயணிக்கலாம் என்று, அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இன்று செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம், தாம்பரம், மதுராந்தகம், திருப்போரூர், மாமல்லபுரம், உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதன் காரணமாக கொரொனா தொற்று அதிவேகத்தில் பரவக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், சக பயணிகள் கூறுகின்றனர்.

எனவே அரசு சிறப்பு கவனம் செலுத்தி கொரொனா தடுக்கும் வகையில் அதிக அளவிலான பேருந்துகளை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Jun 2021 4:41 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்