செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி

நெடுங்குன்றம் ஊராட்சியின் துணைத் தலைவராக பிரபல ரவுடியின் மனைவி விஜயலெட்சுமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
செங்கல்பட்டு : சிறையில் இருந்தபடியே துணை தலைவரான பிரபல ரவுடியின் மனைவி
X

நெடுங்குன்றம் ஊராட்சியின் துணைத் தலைவராக சிறையில் இருந்தபடியே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட விஜயலெட்சுமி,

தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தை சேர்ந்தவர் சூர்யா (34). பிரபல ரவுடி இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. சமீபத் தில் பாஜவில் இணைந்த சூர்யா, தற்போது சிறை யில் உள்ளார்.

இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் உள்ளாட்சி தேர்தலில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் நெடுங்குன்றம். ஊராட்சி, 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து ஜெயலட்சுமி என்பவர் மட்டும் போட்டியிட்ட வேட்பு மனு தாக்கல் செய்தார், அவரே மீண்டும் போட்டியில் இருந்து விலகி வேட்பு மனுவை திரும்ப பெற்றார்.

இதனால் விஜயலட்சுமி. போட்டியின்றி 9வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 20ம் தேதி விஜயலட்சுமி பதவியேற்றார். அப்போது மேடையிலிருந்து விஜய லட்சுமி இறங்கியபோது, ஓட்டேரி போலீசார். பழைய வழக்கில் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், நெடுங்குன் றம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் நடந்தது. விஜய லட்சுமிக்காக முன்மொழிந்த பன்னீர், வழி மொழிந்த பாலாஜி ஆகியோர், விஜயலட்சுமியின் துணை தலைவருக்கான வேட் புமனுவை தாக்கல் செய்த னர்.

அப்போது, நெடுங் குன்றம் ஊராட்சியில் உள்ள 15 வார்டு உறுப்பி னர்களில், விஜயலட்சுமி சிறையில் இருப்பதால், அவரை தவிர 14 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் கலந்துகொண் டனர். இதில், 12 வார்டு உறுப்பினர்கள் விஜயலட் சுமிக்கு ஆதரவு தெரிவித்த னர். இதையடுத்து அவர் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு போட டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.

சிறையில் இருந்தபடியே ஊராட்சி துணை தலைவர் பதவியை போட்டியின்றி வென்றார் பிரபல ரவுடியின் மனைவி விஜயலெட்சுமி

Updated On: 23 Oct 2021 4:15 AM GMT

Related News