/* */

ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3சிறுமிகள் மீட்பு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3மாணவிகள் மீட்கப்பட்டனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3சிறுமிகள் மீட்பு
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பிச்சை எடுத்த 3 மாணவிகள் மீட்கப்பட்டனர். ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் சுகாதார ஆய்வாளர் சுமதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 3 சிறுமிகளை பிடித்து விசாரித்தனர். மேலும், குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிறுமிகள் 3 பேரும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு, பெற்றோர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிகள் மூவரும் ஆந்திர மாநிலம் மொங்கோல் மாவட்டம் மார்க்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏகபாபு - ரமணா தம்பதியரின் மகள் சுப்புலட்சுமி(11), கிருஷ்ணமூர்த்தி- லட்சுமி தம்பதியரின் மகள் நந்தினி(11), சிவா- ஜோதி தம்பதியரின் மகள் ஸ்ரீஜா (8) என்பது தெரியவந்தது.


இதையடுத்து பெற்றோருக்கு போன் மூலம் அழைப்பு கொடுத்து காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெய்ஙகொண்டம் பகுதியில் தலைமுடிகள் வாங்கும் தொழில் செய்து வருவது தெரியவந்தது. மேலும்,மாதம் ஒரு முறை ஊருக்கு செல்வதாகவும், தங்களது கணவர்கள் ஆந்திராவில் இருப்பதாகவும் குழந்தைகளின் தாயார்கள் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு மாவட்ட ஏடிஎஸ்பி அசோக்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிறுமிகள் 3 பேரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் உரிமை ஆணைய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Updated On: 26 Feb 2022 6:34 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?