/* */

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி, கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்

அரியலூரில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி,  கலெக்டர்  ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்
X

அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கிவைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 05.07.2021 முதல் 11.07.2021 வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் சாலையோர மரக்கன்றுகள் நடும் வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இறவாங்குடி ஊராட்சியில் சாலையோரங்களில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்திய சுதந்திர தின 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பாரத பிரதமர் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் முடிக்கப்பபட்ட சாலை ஓரத்தில் மரம் வளர்ப்பு நடவடிக்கையாக, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், இறவாங்குடி ஊராட்சியில் 2021-22-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இறவாங்குடி இருதயபுரம்- வெட்டியார்வெட்டு சாலை மற்றும் கல்லேரி-இருதயபுரம் சலுப்பை சாலை ஆகிய இரு சாலைகளில் மொத்தம் 1700 மரக்கன்றுகள் நடும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் மரக்கன்றுகள் நடவும் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து, தங்கள் பகுதியை பசுமை நிறைந்த கிராமமாக மாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, இறவாங்குடி ஊராட்சியில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியின் கட்டுமானப்பணிகள், ரூ.1.70 இலட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி வீட்டு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர், பணிகளை உரிய தரத்துடன் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், அலுவலகத்தின் மூலமாக பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் பயனாளிகள் குறித்த பதிவேடுகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, அரசின் உதவிகளை தேடி அரசு அலுவலகங்களுக்கு வருகை தரும் பொதுமுக்களின் நலன் கருதி அரசின் திட்டங்கள் மூலம் பயனடையும் வகையில் ஒவ்வொரு அலுவலர்களும் பணியாற்ற வேண்டும் என அலுவலகப்பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், செயற்பொறியாளர் ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், குருநாதன், ஊராட்சி மன்றத்தலைவர் வளர்மதி பாலமுருகன், உதவி செயற்பொறியாளர் வாகிதாபானு, ஒன்றியப்பொறியாளர் நடராஜன் கலந்துகொண்டனர்.

Updated On: 8 July 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...