/* */

மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணிகளை தமிழக முதலமைச்சர் காணொளியில் தொடக்கம்

கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் இரண்டாவது அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதலமைச்சர் துவக்கிவைத்தார்

HIGHLIGHTS

மாளிகைமேட்டில் அகழாய்வுப் பணிகளை தமிழக முதலமைச்சர்  காணொளியில் தொடக்கம்
X

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் இரண்டாவது அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின துவக்கிவைத்தார்.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் இரண்டாவது அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின துவக்கிவைத்தார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமாக கங்கைகொண்டசோழபுரம் விளங்கியுள்ளது. முதலாம் இராசராசனின் (பொ. ஆ. 985-1014) மகனும் அவனைத் தொடர்ந்து ஆட்சி செய்தவனுமான முதலாம் இராசேந்திரனால் (பொ. ஆ.1012 -1044) இந்நகரமானது சோழநாட்டின் தலைநகராக

தோற்றுவிக்கப்பட்டது. முதலாம் இராசேந்திரன் கங்கை வரை சென்ற தனது வெற்றிகரமான பயணத்தை வகையில் தஞ்சாவூரிலிருந்த தலைநகரத்தை பொ.ஆ. 1025 - இல் மாற்றி அமைத்துள்ளான்.

கங்கைகொண்டசோழபுரம் உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தலைநகர் தளமாக மாற்றப்பட்டதையும் நினைவுகூறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் அரண்மனையின் கட்டுமானப் ஆண்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சுட்ட செங்கற்கள் 2781385 செமீ மற்றும் 30x1588 செமீ போன்ற அளவுகளில் கண்டறியப்பட்டுள்ளன. செவ்வக வடிவத்தில் கட்டப்பட்டுள்ள இக்கட்டுமானத்திலுள்ள செங்கற்களின் தலைப்பகுதி வெளிப்புறத்தில் தெரியும் வகையிலும் அடுத்த வரிசை செங்கற்களின் உள்பகுதி தெரியும் வகையிலும் Header and Stretcher முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிவப்பு மற்றும் கருப்பு நிற பானை ஓடுகள், கூரை ஓடுகள், பானையோடுகள் (செலடன் மற்றும் போர்சலைன்), இரும்புப் பொருட்கள், செம்புப் பொருட்கள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், சுடுமண் வட்டச் சில்லுகள், சுடுமண் கெண்டி மூக்குகள் என ஏறத்தாழ 450 தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள், கூரை ஓடுகள் மற்றும் சிறிய தொல்பொருட்கள் மற்றும் கட்டடப்பகுதிகளின் எச்சங்கள் தமிழ்நாட்டின் இடைக்கால அகழாய்வுச் சான்றுகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில், தற்போது, கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேடு பகுதியில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ள ஒன்றிய தொல்லியல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் 20-01.2022 அன்று 2022 பிப்ரவரி மாதத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இரண்டாவது அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி (Video Conferencing) மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின துவக்கிவைத்தார்.

இந்நிகழ்வில் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...