/* */

34ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவவீரருக்கு உற்சாக வரவேற்பு

34 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று வந்த வீரருக்கு முன்னாள் இந்நாள் வீரர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

HIGHLIGHTS

34ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவவீரருக்கு உற்சாக வரவேற்பு
X

34 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீடு திரும்பிய வீரர் திருவேங்கடத்திற்கு பட்டாளம் டெல்டா முன்னாள் இந்நாள் வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.


34 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீடு திரும்பிய வீரருக்கு பட்டாளம் டெல்டா முன்னாள் இந்நாள் வீரர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இந்திய ராணுவத்தில் 34 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்று வீடு திரும்பிய ராணுவ வீரர் திருவேங்கடத்திற்கு சோழநாட்டு பட்டாளம் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

மேலும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் திருவேங்கடம் பேசுகையில் நான் படித்த தொடக்கப்பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவது என்பது கடினமான விஷயம் என்றும் நன்கு படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு பெறலாம் என்று தெரிவித்தார்.

பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம், ஆங்கில அகராதி, எழுது பொருட்கள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்டவைகளை வழங்கி மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.சோழநாட்டு பட்டாளம் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் சார்பில் திருவேங்கடத்துக்கு மரக்கன்றுகள் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் சோழநாட்டு பட்டாளம் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 12:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...