/* */

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

அரியலூர் மாவட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் 6 இடங்களில் எண்ணும் பணி தொடங்கியது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
X

அரியலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 16 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் செந்துறை ஒன்றியம் கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், அரியலூர் ஒன்றியம் ஓட்டக்கோவில் (வார்டு 6), திருமானூர் - ஒன்றியம் வெற்றியூர் (வார்டு 6), கோவிலூர் (வார்டு 1), செந்துறை ஒன்றியம் தளவாய் (வார்டு 9), சிறுகடம்பூர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஜெ.தத்தனூர் (வார்டு 5), ஆண்டிமடம் ஒன்றியம் இடையக்குறிச்சி (வார்டு 2), இலையூர் (வார்டு 9), தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் (வார்டு 8) ஆகிய 9 வார்டு உறுப்பினர் பதிவி இடங்கள் ஆக மொத்தம் 12 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெற்றது.

நடைபெற்ற தேர்தலில் 4321 ஆண் வாக்காளர்களும், 4595 பெண் வாக்காளர்களும் சேர்த்து 8916 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 79.08 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 85.43 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 67.30 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 83.31 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 77.30% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.96% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் 78.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பதிவான வாக்குப்பெட்டிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு மூண்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. 24மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஆறு ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

இன்று பாதுகாப்பு அறையில் இருந்த வாக்குப்பெட்டிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் உடைக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தலைமையில் முகவர்கள் முன்னிலையில், தேர்தல் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Updated On: 12 Oct 2021 4:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  2. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  3. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  4. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  5. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  6. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  7. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  8. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்
  9. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  10. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய