/* */

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல்

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில், கணக்கில் வராத ரூ. 50,800 பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: கணக்கில் வராத ரூ.50,800 பறிமுதல்
X

அரியலூரில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை மேற்கொண்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முதல் தளத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 5 மணி அளவில் தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை இன்று விடியற்காலை வரை நீடித்தது.

இதில், கணக்கில் வராத 50 ஆயிரத்து 800 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களை இரவு 12 மணிக்கு பிறகும், மற்றவர்கள் நான்கு மணிக்கு பிறகுமே வீட்டிற்கு செல்ல லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 Oct 2021 4:56 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!