/* */

மக்கள் தொடர்பு முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.44.63 லட்சம் மதிப்பீட்டில்உதவி

மக்கள்தொடர்புமுகாம் நடைபெறும் கடம்பூர் கிராமத்திற்கு மாவட்டகலெக்டர், அனைத்து அலுவலர்களும் அரசு பேருந்தில் பயணம் செய்தனர்

HIGHLIGHTS

மக்கள் தொடர்பு முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.44.63 லட்சம் மதிப்பீட்டில்உதவி
X

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.44.63 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 170 பயனாளிகளுக்கு ரூ.44.63 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கடம்பூர் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (08.06.2022) நடைபெற்றது.

இம்முகாமில், சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் 58 பயனாளிகளுக்கு ரூ.6.96 இலட்சம் மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதித்தொகைக்கான ஆணைகளையும், 28 நபர்களுக்கு ரூ.6.30 இலட்சம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகைகளையும், 28 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளும், 16 பயனாளிகளுக்கு ரூ.1.16 இலட்சம் மதிப்பீட்டில் நத்தம் மனைப் பட்டாக்களும், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.91,138/- மதிப்பீட்டில் ரோட்டவேட்டர், பவர் வீடர் மற்றும் வேளாண் இடுபொருட்களும்.

தோட்டக்கலைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.5,75,352/- மதிப்பில் ரோட்டவேட்டர், காய்கறி விதைகளும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.52,500/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.52,500/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 3 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.21 இலட்சம் மதிப்பில் கடனுதவித் தொகைக்கான காசோலைகளையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 1 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.90,000/- மதிப்பில் கடனுதவித் தொகைக்கான காசோலையினையும், கோட்ட கலால் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.60,000/- மதிப்பில் கறவை மாடுகளும் என ஆகமொத்தம் 170 பயனாளிகளுக்கு ரூ.44,63,490ஃ- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், மகளிர் திட்டம், சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்ட பல்வேறு அரசின் துறைகளின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் மற்றும் அவற்றை பெறும் வழிமுறைகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு திட்ட விளக்க உரையாற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மேலும், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசியதவாது, முதலமைச்சர் ஆணைக்கிணங்கவும், போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், பொதுமக்களின் குறைகளை தீர்த்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமின் மூலம் பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே அனைத்துத்துறை அலுவலர்களும் நேரடியாக சென்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று தீர்வு கண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கடம்பூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றும், அரசின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மேலும், பொதுமக்களுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இம்முகாமிற்கு ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 229 மனுக்களில் தகுதியுடைய 173 மனுக்கள் ஏற்கப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று இன்றைய தினம் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களிலுள்ள இ-சேவை மையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களுக்கு தேவையான சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதனால், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று வருவது தவிர்க்கப்படும். தற்பொழுது ஒவ்வொரு குடும்பத்திலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நபர்கள் உள்ளனர். இதன் மூலமாகவோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து ஆன்லைன் மூலம் மனு செய்து பயன் பெறலாம்.

அரியலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பிற நபர்கள் சுய தொழில் செய்து முன்னேறும் வகையில் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள சுயதொழில் செய்ய விரும்புவோர்கள் மாவட்ட தொழில் மையத்தில் அதற்குரிய விண்ணப்பங்களை வழங்கும் பொழுது வங்கிகள் மூலம் சுய தொழில் செய்ய கடன் பெற்று வழங்கப்படும். இதனை படித்த இளைஞர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் தற்பொழுது நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் பெண்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்வதுடன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதனையும் பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசினார்.

முன்னதாக, மாவட்ட அளவிலான அலுவலர்கள் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தலுக்கிணங்க, டீசல் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கடம்பூர் கிராமத்திற்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியுடன் அரசு பேருந்தில் பயணம் செய்தனர்.

இம்முகாமில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், கடம்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் ப.ஆறுமுகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 8 Jun 2022 2:19 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்