/* */

அரியலூர் மாவட்டத்தில் நவ.19ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறுகணினி திருத்தங்கள் தொடர்பான பட்டா திருத்த சிறப்பு முகாம்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நவ.19ல் பட்டா திருத்த சிறப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண பட்டா திருத்த சிறப்பு முகாம் மாவட்டத்தின் குறிப்பிட்ட கிராமங்களில் 19.11.2021 (வெள்ளிக்கிழமை) அன்று நடக்கவுள்ளது.

அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும், விவசாயிகள், வீட்டு உரிமையாளர்களின் பட்டாவில் உள்ள சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு மற்றும் தீர்வு அலுவலர்கள் தலைமையில் வாரந்தோறும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. முகாமில் பெறப்படும் சிறு கணினி திருத்தம் சார்ந்த மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும்.

வட்டம் வாரியாக 19.11.2021 அன்று (வெள்ளிக்கிழமை) முகாம் நடக்கவுள்ள கிராமங்களின் விவரம்:

அரியலூர் வட்டத்தில் கருப்பூர்சேனாபதி மற்றும் அருங்கால் கிராமங்களுக்கு கருப்பூர்சேனாபதி கிராம சேவை மைய கட்டிடத்திலும் குலமாணிக்கம் (கி) மற்றும் குலமாணிக்கம் (மே) கிராமங்களுக்கு குலமாணிக்கம் (கி) கிராம சேவை மைய கட்டிடத்திலும் செந்துறை வட்டத்தில் செந்துறை மற்றும் நக்கம்பாடி கிராமங்களுக்கு செந்துறை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் உடையார்பாளையம் வட்டத்தில் பருக்கல்(கி) மற்றும் சுத்தமல்லி கிராமங்களுக்கு சுத்தமல்லி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் த.சோழன்குறிச்சி(வ) மற்றும் த.சோழன்குறிச்சி(தெ) கிராமங்களுக்கு த.சோழன்குறிச்சி(வ) கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் ஆண்டிமடம் வட்டத்தில் மருதூர் கிராமத்திற்கு மருதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலும் முகாம் நடக்கவுள்ளது.

மேற்படி இந்த சிறப்பு முகாமில் சிறு கணினி திருத்தங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் மனுக்கள் அளித்து பயன் அடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Nov 2021 10:12 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...