/* */

அரியலூறில் நடைபெற்ற ஜமாபந்தியில் 73 மனுக்களுக்கு தீர்வு: கலெக்டர் தகவல்

ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட183 மனுக்களில் 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூறில் நடைபெற்ற ஜமாபந்தியில்  73 மனுக்களுக்கு தீர்வு: கலெக்டர் தகவல்
X

அரியலூர் வட்டத்தில் இறுதி நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டத்தில் 1431-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இறுதி நாள் நிகழ்ச்சியாக விவசாய குடிகள் மாநாடு நிகழ்ச்சி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (21.06.2022) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், இன்றைய தினம் ஏலாக்குறிச்சி உள்வட்டத்திற்குட்பட்ட விழுப்பணங்குறிச்சி, கீழகொளத்தூர், சின்னப்பட்டாக்காடு, கோவிலூர், சுள்ளங்குடி, ஏலாக்குறிச்சி, அழிகயமனவாளம், காமரசவல்லி, குருவாடி, தூத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 183 மனுக்களில் 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், 98 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 73 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார். மேலும், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் அரியலூர் வட்டத்தில் 14.06.2022 முதல் 21.06.2022 வரை நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சியில் மொத்தம் 1342 மனுக்கள் பெறப்பட்டு, 472 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 765 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 105 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 657 மனுக்கள் பெறப்பட்டு, 221 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 386 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 50 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உடையார்பாளையம் வட்டத்திற்குட்பட்ட ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 1359 மனுக்கள் பெறப்பட்டு, 205 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 1117 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 37 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. செந்துறை வட்டத்திற்குட்பட்ட ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சியில் இதுவரை மொத்தம் 802 மனுக்கள் பெறப்பட்டு, 326 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 453 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 23 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரியலூர் மாவட்டத்தில் 14.06.2022 முதல் 21.06.2022 வரை நடைபெற்ற 1431-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம் மற்றும் ஆண்டிமடம் ஆகிய வட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 4160 மனுக்கள் பெறப்பட்டு, 1224 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 2721 மனுக்கள் விசாரணையில் உள்ளது. மேலும், 215 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்;.

இந்நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர்கள் குமரையா, முத்துலெட்சுமி, துணை வட்டாட்சியர்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Jun 2022 1:36 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?