/* */

கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: தேமுதிக பொருளாளர் பிரமலதா

இலங்கை நிலையை மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி கச்சத்தீவை மீட்க சரியான தருணம் இது என தேமுதிக பொருளாளர் பிரமலதா தெரிவித்தார்.

HIGHLIGHTS

கச்சத்தீவை மீட்க சரியான தருணம்: தேமுதிக பொருளாளர் பிரமலதா
X

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த் .

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது தமிழக அரசு ஓராண்டில் நூற்றாண்டு சாதனை என்று கூறிவருகிறது. ஆனால் மக்கள் போற்றும் சாதனை என்று எதுவும் பார்க்கமுடியவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு தொடர்கிறது. ஆந்திரா மாநில முன்னால் முதல்வர் சந்திரபாபுநாயுடு ரேசன்அரிசி கடத்தலை கட்டுப்படுத்த தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார். இதன்மூலம் தமிழகத்தின் நிலை என்ன என்று தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ரேசன் கடத்தல் என்பது ஆளும் கட்சியினரே செய்கின்றனர். எனவே தமிழக அரசு மக்களின் அடிப்படை கோரிக்கைகளான தூர்வாருதல், சாலைவசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று தமிழகஅரசு கூறுகிறது. ஆனால் பட்டபகலிலேயே வெளியில் செல்லமுடியவில்லை. சட்டம் ஒழுங்கு கேள்விகுறியாக உள்ளதா என்பதை பொதுமக்கள் முடிவெடுக்கட்டும். குற்றவாளிகள் இருப்புகரம் கொண்டு அடக்கவேண்டும்.

தேமுதிகவை பொருத்தவரையில் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றோம். கட்சிதேர்தல், பொருப்பாளர்களுடன் ஆலோசனை உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரஉள்ளது.

மத்திய, மாநில அரசுகள் செய்யவேண்டிய நலத்திட்டங்கள் அதிகம் உள்ளன. மாவட்டந்தோறும் தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவேண்டும். லஞ்சம் ஊழல் ஒழியவில்லை. மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு அரசியல் மட்டுமே செய்கின்றனர். மக்களுக்கு திட்டங்கள் சேருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டும்.

சசிகலாவின் அறிவிப்பு என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அவர் ஆன்மீக பயணமும், அவ்வப்போது அறிவிப்புகளும் செய்துவருகின்றார். முழுஅளவில் அவர் அரசியலுக்கு வந்தபிறகு பொருத்திருந்து பார்ப்போம். இலங்கையில் நிலையை மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தவேண்டும். இது கச்சத்தீவை மீட்க சரியான தருனம். இதுபோன் செயல்களை செய்தால் பாராட்டுவோம்.

பெட்ரோல் விலைஉயர்வில் அண்டை மாநிலங்கள் குறைத்து வருகின்றன. நமது மாநில அமைச்சரும் மத்தியஅரசுபோல் குறைத்து மக்களின் சிரமத்தை உணர்ந்து பார்க்கவேண்டும். பெட்ரோல் விலைஉயர்வால் சாமனிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் வளர்சிகுறித்து உணர்ந்து பெட்ரோல் விலையை குறைக்கவேண்டும்.

இலங்கையில் ஆட்சிமாற்றமே நிகழ்ந்து பொதுமக்களின் எதிர்ப்பிற்கு உண்மையான காரணங்கள், உள்நாட்டு உற்பத்தியில் கவனம் இல்லாமை, இலவச திட்டங்களை அதிகமாக வழங்கியதுதான். இதனை தமிழக அரசு பாடமாக எடுத்து கொள்ளவேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்தான் 37சதவீதம் இலவச திட்டங்கள் அறிவிக்கப்படுவதாக சர்வே தெரிவிக்கின்றது. ஓட்டுக்காக, ஆட்சியை பிடிப்பதற்காக வழங்கப்படும் இலவசங்கள் பொருளாதாரத்தை பாதிக்கின்றது. பொங்களுக்கு ஆயிரம் ரூபாய் இலவசம், பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், ரேசனில் இலவச பொருள்கள் என்று பலத்திட்டங்களை ஆறுலட்சம் கடனில் உள்ள தமிழகஅரசு செயல்படுத்தி, இதேநிலையை தொடர்ந்தால் இலங்கையின் நிலை தமிழகத்திற்கும் வரும்.

ஆர்.எஸ்.பாரதி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முதலமைச்சரிடம் கேட்கக்கூடாது. டி.ஆர்.பாலுவிடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறுவது, மக்களை முட்டாளுக்கும் பேச்சு. மக்கள் தேர்தல் வாக்குறுதியை நம்பி வாக்களித்துள்ள நிலையில் ஆட்சி எந்தளவுக்கு இருக்கிறது என்பது ஒருபானைக்கு ஒருசோறு என்பது போல் உள்ளது. இது கண்டிக்க தக்கது.

நீட்விலக்கு சாத்தியமா என்பதை முதலில் தமிழக அரசு உணரவேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றக்கூடாது என்று கூறினார். பேட்டியின்போது தேமுதிக மாவட்டச்செயலார் இராம.ஜெயவேல் உள்ளிட்ட மாவட்ட, நகர, பேருர் பொருப்பாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 25 May 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  2. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  4. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  5. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  6. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  8. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  9. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  10. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...