/* */

செவிலியர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்து கொண்டாடிய செவிலியர்கள்

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில், செவிலியர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்து கொண்டாடிய செவிலியர்கள்.

HIGHLIGHTS

செவிலியர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுத்து கொண்டாடிய செவிலியர்கள்
X

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில், செவிலியர் தினத்தையெட்டி உறுதி மொழி எடுத்து கொண்டாடிய செவிலியர்கள்

ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் செவிலியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. 'விளக்கேந்திய மங்கை' என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளே உலகம் முழுக்க செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதியன்று இந்த சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் செவிலியர்களை கௌரவிக்கும் விதமாக மருத்துவமனைகளில், செவிலியர் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

அதன்படி ஜெயங்கொண்டம் அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் உள்ள செவிலியர் பள்ளியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் செவிலியர் பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதையடுத்து அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் உள்ள செவிலியர்களின் சார்பில் செவிலியர் தினம் உறுதிமொழி ஏற்று கொண்டாடப்பட்டது. இந்த உறுதி மொழியின் போது மெழுகுவர்த்தியை ஏந்தி சாதி மதம் இனம் மொழி எந்தப் பாகுபாடுமின்றி நோயாளிகளை கனிவுடன் கவனிப்போம் என உறுதியேற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் நைட்டிங்கேல் அம்மையாரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 2:08 PM GMT

Related News