/* */

நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு அமைச்சர் சிவசங்கர் நன்றி

நிலத்தை திரும்பக்கொடுத்து அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்ப வழங்க வேண்டாம்என்று அறிவித்தது வரலாற்றில் இல்லாத சாதனை

HIGHLIGHTS

நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு அமைச்சர் சிவசங்கர் நன்றி
X

அமைச்சர் சிவசங்கர் 

ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப வழங்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்

அந்த அறிக்கையில் 1990 ஆம் ஆண்டு, ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்திற்கான பணிகள் துவங்கி 13 கிராமங்களை சேர்ந்த 8,373 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தன. மிகக்குறைவான இழப்பீட்டு தொகை அரசால் நிர்ணயிக்கப்பட்டிருந்ததால், 3,500க்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர். கிட்டத்தட்ட 10,000 வழக்குகள் பதியப்பட்டன. 1999ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி நில உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அப்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த மறைந்த எஸ்.சிவசுப்ரமணியன் தலைமையில் சென்ற நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்தது. ஆனால் சில அரசியல் கட்சிகள் போராட்டத்தை அறிவித்த நிலையில், பேச்சு வார்த்தை முன்னேற்றமடையாமல் தேக்கமடைந்தது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

2001ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, இந்த திட்டம் குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்கட்சியாக இருந்த போது, போராட்டம் நடத்திய அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

2006ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. அன்றைய ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நான் சட்டப்பேரவையில் இத்திட்டம் குறித்து உரையாற்றினேன். அன்றைய மத்திய அரசில் அமைச்சராக இருந்த ஆ.ராசா முதல்வர் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றார்.

அன்றைய மின் துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீரசாமி பெரம்பலூர் வருகை தந்து, விவசாயிகளை சந்தித்து கருத்துகளை கேட்டு அதனை முதல்வர் கவனத்திற்கு அவற்றை கொண்டு சென்றார். ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம் குறித்த 10,000 வழக்குகளை விசாரிக்க இரண்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று ஏக்கருக்கு ரூ 15 லட்சம் அளவில் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டது. மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டம், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் மூலம் துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்.

2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில், நீதிமன்றம் நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து அ.தி.மு.க அரசு மேல்முறையீட்டுக்கு சென்றது. நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் அ.தி.மு.க அரசின் ஆர்வமின்மையால், ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட செயலாக்கத்தில் இருந்து பின் வாங்கியது.

தேர்தலுக்கு முன்பாக, அரியலூரில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் மேலூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயி, " ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை உரிமையாளர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்", என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பதிலளித்த ஸ்டாலின்,"தி.மு.க ஆட்சி அமைந்த உடன் ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்ட பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும்", என்று உறுதியளித்தார்கள்.

ஆட்சி அமைந்து ஒரு வருடத்தில், சொன்னதை செய்து காட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். எந்த கட்சியும் போராட்டம் நடத்தாமல், கோரிக்கை வைக்காமல் தான் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளார் முதலமைச்சர்.

நிலத்தை திரும்பக் கொடுத்ததோடு மாத்திரமல்லாமல், அதற்காக அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையை திரும்ப வழங்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது வரலாற்றில் இல்லாத சாதனையாகும் இது.

25 ஆண்டு காலப் பிரச்சினை முடிவுக்கு வந்திருக்கிறது. நிலத்திற்கான உரிய இழப்பீடு கிடைக்காமல், நிலமும் திரும்ப கிடைக்குமா என தவித்து வந்த விவசாயப் பெருங்குடி மக்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார் தமிழக முதல்வர். பாதிக்கப்பட்ட 3,500 குடும்பத்தில் ஒருவன் என்ற முறையிலும், இந்தப் பகுதியின் மக்கள் பிரதிநிதிகளில் ஒருவன் என்ற முறையிலும் ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் சார்பாக இரு கரம் கொண்டு வணங்கி நன்றி கூறுகிறேன்.

Updated On: 9 Jun 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  7. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  8. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  9. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்