/* */

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு.

HIGHLIGHTS

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள்  மீது உடனடி நடவடிக்கை
X

முஸ்லீம் மகளிர் உதவும் 9 சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி  வழங்கினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 299 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நலத்துறையின் சார்பில் முஸ்லீம் மகளிர் உதவும் 09 சங்கங்களுக்கு தலா ரூ.10000/- வீதம் ரூ.90000/- மதிப்பில் உதவித்தொகைக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது