/* */

அரியலூர்: அரசு ஊழியர்கள் மோட்டார் வாகனத்தை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் மோட்டார் வாகனங்களை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்: அரசு ஊழியர்கள் மோட்டார் வாகனத்தை தவிர்க்க கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில், 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது.

வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது. இச்சுகாதாரக்கேடு சுவாச அமைப்பிற்கு லேசானது முதல் கடும் எரிச்சலையும், தலைவலி, குமட்டல், கண் எரிச்சல், நுரையீரல் திறன் குறைதல், உடல் பாதுகாப்பு நலிவடைதல் மற்றும் புற்றுநோயை உண்டாக்குகிறது. புகை, ஓசோன், அமில மழை போன்ற இரண்டாம் நிலை மாசு ஏற்படுத்திகள் கடும் பார்வை கோளாறுகளையும் உடல் பிரச்சனைகளையும் எற்படுத்துகின்றன. வாகனங்களிலிருந்து வெளியேறும் நுண்துகள்கள் மட்டுமே ஆண்டுதோறும் ஏற்படும் அகால மரணங்களுக்கு பொறுப்பான காரணியாகும்.

பெரும்பாலான பெரும் நகரங்களில் அதிக அளவிலான மோட்டார் வாகனங்களினால் கடும் போக்குவரத்து நெருக்கடி மற்றும் அதிக ஒலி மாசு ஏற்படுகின்றது. இவ்வாறு வாகன நெருக்கடி ஏற்படும் பகுதிகளில் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் புகை மாசு உயர்ந்து, மாசின் அளவு மிக அதிக அளவில் ஏற்படுகிறது. ஆவியாகும் கரிம கலவைகள் போன்ற மாசு எற்படுத்திகள் நகரங்கள் மற்றும் நெருக்கடியான பகுதிகளில், நகரும் போக்குவரத்து பகுதிகளை விட 250 சதவீதம் அதிகமாகக் காணப்படுகிறது. நமது நாட்டில் மில்லியனுக்கு மேல் ஜனத்தொகை அளவுள்ள மற்றும் காற்றின் தரத்தை அடையாத 132 நகரங்களின் பட்டியலில் சென்னைiயும் ஒரு நகரமாக மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில், உலகின் மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றியான இந்தியா, பருவ நிலை மாற்ற விளைவுகளால் எதிர்கொண்ட கடுமையான பாதிப்பினால் தற்பொழுது முதல் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதாக அறிவித்தது. அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பின் மூலமே இக்கடினமான இலக்கை அடைந்து சாதிக்க முடியும்.

தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. ஆகையால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அதன் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம் - பயண நாள் என கடைப்பிடித்து தனி நபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது.

ஆகையால் வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து வாரிய பணியாளர்களும் மற்றும் ஒப்பந்த பணியாளர்களும் மொத்தம் 250 பேர் பொது போக்குவரத்து மூலமோ அல்லது நடந்தோ அல்லது சைக்கிள் அல்லது மின் சைக்கிள் வாகனங்களின் மூலம் அலுவலகத்திற்கு வந்து சேருவார்கள். இந்த யோசனை முதுநிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டத்தில் உதயமானது மற்றும் இம்முயற்சியினால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்திற்குள் 20 சதவீதம் காற்று மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அனைத்து அரசுத்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் பார்வையார்களையும் புதன்கிழமை அன்று மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஊக்குவிக்கலாம். இது ஒரு சிறு படியென்றாலும் சுற்றுசூழலை காக்கும் பயணத்தின் துவக்கமாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 28 Nov 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  2. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  3. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  4. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  5. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  6. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  9. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  10. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!