/* */

அரியலூர் மாவட்டத்தில் 1.46 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் 1.46 லட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 1.46 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்
X

அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாமை கலெக்டர் ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார்.

கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய்நோய் என்பது கால்நடைகளை தாக்கும் கொடிய நுண்ணுயிரி கிருமிகளால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இந்த தொற்று நோய் பரவும் போது கால்நடைகள் இறப்பு, உற்பத்தி இழப்பு மற்றும் இனப்பெருக்க கோளாறுகள் ஏற்படும். எனவே இந்த நோயினை முற்றிலுமாக அழித்திடும் வகையில் தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின்கீழ் இந்த தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் வட்டம், அஸ்தினாபுரம் கிராமத்தில் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த முகாமில் 450 பசுக்களுக்கு கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மூன்று நபர்களுக்கு புல் நறுக்கும் கருவிகளும், கால்நடை உரிமையாளர்களுக்கு கலப்பின தாதுஉப்புகளும் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது. மேலும், 450 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த தடுப்பூசிகளை கால்நடைகளுக்கு செலுத்துவதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்த முடியும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கும் என 1,46,700 கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டு, 21 நாட்களில் அனைத்து கால்நடைகளுக்கும் கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது. மேலும், மாடுகளுக்கு காதுகளில் அடையாள வில்லைகள் அணிவிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்ட விவரங்கள் தரவுகளாக INAPH இணையதளத்தில் ஏற்றப்பட உள்ளது. இந்த தடுப்பூசி ஆனது முற்றிலும் இலவசமாக கால்நடைகளுக்கு செலுத்தப்பட உள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளும் தங்களது கால்நடைகளை கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக்கொண்டு விடுபடாமல் அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீதுஅலி, உதவி இயக்குநர்கள் செல்வராசு,சொக்கலிங்கம், கால்நடை மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 March 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...