/* */

காவிரியில் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் பெண்ணாறு வாய்க்காலில் ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

காவிரியில் ஜூன் முதல் வாரம் தண்ணீர் திறக்க  விவசாயிகள் கோரிக்கை
X

விவசாய சங்க தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன்

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கையில்,

இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருக்கிற காரணத்தால் இன்று மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துள்ளார். இதனால் அரியலூர் மாவட்டத்தின் விவசாயத்துக்கு எந்த பயனும் இல்லை.

புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் பொண்ணாறு வாய்க்கால் மூலம் மட்டுமே அரியலூர் மாவட்டம் திருமானூர் மற்றும் தா.பழுர் டெல்டா பாசன பகுதி விவசாயிகளுக்கு பயன் பெற்று வந்தார்கள். ஆனால் முன் கூட்டியே தண்ணீர் திறந்து விடும் போதும், ஜூலை மாதம் தான் இந்த இரண்டு வாய்க்கால்களும் திறக்கப்படுகிறது. எனவேஇந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும்.

மேலும் பெண்ணாறு வாய்க்கால் மூலம் பாசன கிளை வாய்க்கால் தா.பழுர் பகுதியில் 1,2,3 நம்பர் வாய்க்கால் அனைத்தும் சுமார் 18.50 லட்சம் செலவில் அவசர அவசரமாக தூர் வாரி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சுக்கிரன் ஏறி தூத்தூர் பெரிய ஏரிகள் தூர் வாரும் பணி தொடங்கியது. அதன் பனியை அவசரமாக தூர் வாரி அரைகுறையாக முடிக்காமல் நூறு சதவிகிதம் முழுமையாக தூர் வாரும் பணியை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவேண்டும்.

மேலும் இந்த மாதிரி தண்ணீர் திறந்து அதிக அளவில் போகும் போது வீணாகி கடலில் கலக்கிறது. அதை தடுத்து நிறுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் இரண்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை திட்டத்தை செயல்படுத்த முன்னாள் அரசு அறிவித்தது. ஆய்வு பணி மற்றும் திட்டமதிபீடு செய்து முடித்து நிதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டிய நேரத்தில்இந்த திட்டம் தற்போதைய அரசு நிறுத்தி வைத்து உள்ளது.

காவேரி கரை புரண்டால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என ஒரு பலமொழி உண்டு. மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும் போது திறக்கப்படும் நீர், கடலில் சென்று வீணாக கலப்பதை தவிர்க்க கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் திட்டத்தை அரசு உடனடியாக செயல் படுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 24 May 2022 11:54 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  2. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  3. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  7. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  9. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  10. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்