/* */

கொள்ளிடம்ஆற்றில் தடுப்பணை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்

தூத்தூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்.

HIGHLIGHTS

கொள்ளிடம்ஆற்றில் தடுப்பணை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்
X

விவசாயிகள் குறை தீர் கூட்டம்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், அரியலூர் மாவட்டம் தூத்தூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு ஆய்வுப்பணிகள் நடைபெற்று திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் இத்திட்டம் மக்களுக்கும் விவசாயத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டம் இல்லை எனக்கூறி தற்போதைய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் கதவணை யுடன் கூடிய தடுப்பணை கட்டுவதற்கான திட்டத்தையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் எக்காரணத்தைக் கொண்டும் விவசாயிகள் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை என அரசு அறிவுறுத்தியும் தற்போது வரை 30 ரூபாயிலிருந்து 40 ரூபாய் வரை லஞ்சம் வாங்குகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் யாரும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. லஞ்சம் கேட்பதாக நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது புகார் வந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் அனைத்து துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 March 2022 9:10 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!