/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு  ஸ்கூட்டர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரியலூர் மாவட்டத்தில் தசை சிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தசைசிதைவு நோய் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (18 வயதிற்கு மேற்பட்டோர்), முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (18 வயதிற்கு மேற்பட்டோர்) வழங்கப்பட உள்ளது.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் தனித்தவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பணிச்சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவராயின் சுயத்தொழில் புரிவதற்கான சான்று), மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலவலகம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்-621704 ல் 16.11.2021 அன்று நடைபெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு 04329-228840 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 9 Nov 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...