/* */

மாற்றுத்திறனாளி, பார்வையற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி, பார்வையற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு
X

 அரியலூர் கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

மாற்றுத்திறனாளி, பார்வையற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

2021-2022ம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியருக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவியர்கள் வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியருக்கான ஓர் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.1000/-, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.3000/-, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.4000/-, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4000/- , இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6000/- , முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7000/- வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு, தொழிற்பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3000/- மற்றும் இளங்கலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.5000/- மற்றும் முதகலை பட்டபடிப்பு மாணவர்களுக்கு ரூ.7000/- வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

2021-2022ஆம் நிதியாண்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள் / தனியார் பள்ளிகள், அரசு / அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ மாணவியர் பிறத்துறைகளில் கல்வி உதவித்தொகை பெறவில்லை என தலமையாசிரியர் / கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

2021-2022ஆம் நிதியாண்டிற்கு இம்மாவட்டத்தில் பயிலும் தகுதியான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை 17, தரைத்தளம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மேற்காணும் சான்றுகளுடன் வங்கி கணக்கு புத்தக நகலுடன், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Updated On: 14 July 2021 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  4. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  5. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  6. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  7. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  9. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
  10. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...