/* */

மின்கட்டண உயர்வை ரத்து செய்யகோரி இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

Electricity Tariff - இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மின்கட்டண உயர்வை ரத்து செய்யகோரி இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக கட்சியினர்.

Electricity Tariff - அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அருள்கணேசன், மாவட்ட பொருளாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்சார கட்டண உயர்வை குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும். பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்க்கவ குல முன்னேற்ற சங்க மாறில துணைபொதுச்செயலாளர் கதிர்கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிரணி தலைவர் பச்சையம்மாள், திருமானூர் ஒன்றிய செயலாளர் குமாரசாமி, செந்துறை ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, சன்னாவூர் பச்சமுத்து உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செய்தி தொடர்பாளர் சங்கர் நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Aug 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை