/* */

கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையம்

அரியலூர் மாவட்டத்தில் கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையத்தை கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

HIGHLIGHTS

கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையம்
X

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொற்றால் பாதிக்கப்படைந்த நபர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி, சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் அறிகுளிகள் அற்ற கோவிட் -19 தொற்றாளர்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ முறையின் மூலம் சிகிச்சை அளிக்கும் வகையில் அரியலூர் மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.


இம்மையத்தில் 23 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீர், கபசூர குடிநீர் சூரணம் உள்ளிட்டவைகளுடன் அலோபதி முறையிலான சிகிச்சைகளும் இங்கு வழங்கப்படவுள்ளன. சித்த மருத்துவ அலுவலர், அலோபதி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு கோவிட்-19 தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

நோய் அறிகுறிகள் அல்லது சந்தேகத்திற்கு ஆட்படும் பட்சத்தில் மருத்துவமனைக்கு செல்ல தயங்குபவர்கள் சிகிச்சைக்காக இங்கு அனுமதிக்கப்படுபவார்கள். மேலும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு யோகா பயிற்சி, மூச்சுப்பயிற்சி, கபசூர குடிநீர், சிற்றுண்டி, உடல் தேற்றி மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவைகள் சித்த மருத்துவர்கள் மற்றும் அலோபதி மருத்துவர்கள் மூலமாக சிகிச்சைகளுடன் கொரோனா நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகளும் அளிக்கப்படவுள்ளன.

புதியதாக அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு சிகிச்சை மையத்தினை மாவட்ட கலெக்டர் த.ரத்னா, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,

முதற்கட்டமாக அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 சிறப்பு மையத்தில் சிகிச்சைகள் அளிக்கப்படும். மேலும் கொரோனா நோய்தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் இடங்களை கண்டறியப்பட்டு, தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் 108 அவசர கால ஊர்தி மூலமாக மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை காத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.சுந்தர்ராஜன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) இளவரசன், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ், வட்டார மருத்துவ அலுவலர் எழில்பாரதி, வட்டாட்சியர் ராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 12 April 2021 1:10 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...