/* */

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேசஒற்றுமை நடைபயணம் : அரியலூரில் விளக்க கூட்டம்

காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு நகரின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்

HIGHLIGHTS

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேசஒற்றுமை நடைபயணம் : அரியலூரில் விளக்க கூட்டம்
X

அரியலூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டும்,  நிதியுதவி பெறும் நிகழ்ச்சி  நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 7ம்தேதி கன்னியாகுமரியில் இருந்து தேச ஒற்றுமை நடை பயணம் துவக்க உள்ளார்.இந்நிகழ்விற்கு பொதுமக்களிடம் ஆதரவு கேட்டும், பொதுமக்களிடமிருந்து நிதியுதவி பெறும் நிகழ்ச்சி அரியலூரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் அமானுல்லா, மாவட்ட செயலாளர் பாலசிவகுமார், மாமு சிவக்குமார், மாவட்ட செயலாளர் ஜி.செந்தில்குமார், தொழிற்சங்க செயலாளர் ஜே பி ராஜா, மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆண்டனிதாஸ், நகர பொருளாளர் சங்கர், வார்டு தலைவர்கள் ரமேஷ், ரவி, கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி நிதி பெற்றனர்.

காமராஜர் சிலையில் இருந்து புறப்பட்டு மார்க்கெட் தெரு, மங்காய் பிள்ளையார்கோவில் தெரு, வெள்ளாளர் தெரு, சின்னகடைவீதி உள்ளிட்ட நகரின் பலப்பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.முன்னதாக அரியலூர் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள காந்தி, காமராஜர் சிலைகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேச ஒற்றுமை நடைபயணம் குறித்து விளக்ககூட்டம் நடைபெற்றது.

Updated On: 4 Sep 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!