/* */

கல்வி நிறுவன தங்கும் விடுதிகளை பதிவு செய்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு

Ariyalur News Today - அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகளை பதிவு செய்து கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி நிறுவன தங்கும் விடுதிகளை பதிவு செய்து கொள்ள கலெக்டர் அறிவிப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி.

Ariyalur News Today - அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் தனியார் கல்வி நிறுவனங்களினால் நடத்தப்பட்டு வரும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகள் அனைத்தும், தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014 மற்றும் விதிகள் 2015படி தங்களது விடுதிகளை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இல்லங்கள் பதிவு செய்வதற்கு பதிவு கட்டணமாக ரூ.3000/- District Collector, Ariyalur என்ற பெயரில் வரைவேலை எடுத்து வழங்கப்பட வேண்டும் எனவும், பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2வது தளம், அரசு பல்துறை வளாகம், அரியலூர் - 621704, தொலைபேசி எண் 04329-296239 என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.

பதிவு பெறாமல் நடத்தப்படும் விடுதிகள் கண்டறியப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 July 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  6. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  7. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!