/* */

அரியலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர்  ஆய்வு
X

அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டம், அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம், அரியலூர், கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்ததைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.

அதன் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பணி அல்லாத பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும், நெடுநாட்கள் கழித்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படவுள்ள நிலையில் வகுப்பறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், அரியலூர் மற்றும் கோவிந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என்பது குறித்தும், பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், 100 சதவீத ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி வளாகம், வகுப்பறைகள், கழிவறைகள் மற்றும் குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவைகள் முறையாக சுத்தம் செய்யவும், பள்ளிகளுக்க வருகை தரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வகையில் உணவு தயாரிக்கும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் உணவுகளை சமைக்கவும், போதுமான அளவில் உணவுப்பொருட்களை இருப்பு வைத்திடவும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கோவிந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர், கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் அதிக அளவில் ஒரே இடத்தில் பணிபுரிய வேண்டிய சூழ்நிலையின் காரணமாக பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

அதிக அளவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.இராமன், நகராட்சி ஆணையர்தமயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, அன்புசெல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 31 Aug 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?