/* */

அரியலூர்: 10-ம்தேதி பொதுவிநியோகத் திட்ட பொது மக்கள் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வருகிற 10ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்: 10-ம்தேதி பொதுவிநியோகத் திட்ட பொது மக்கள் குறைதீர் கூட்டம்
X

பைல் படம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம், 10.09.2022 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.

மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்வார்கள். மேலும், அக்கூட்டம் நடத்தப்படுவதை மேற்பார்வை செய்திட அரியலூர் வட்டம், இலுப்பையூர் கிராமத்திற்கு அரியலூர் துணைப்பதிவாளர் (பொ.வி.தி), உடையார்பாளையம் வட்டம், காரைக்குறிச்சி கிராமத்திற்கு, அரியலூர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், செந்துறை வட்டம், தளவாய் (வ) கிராமத்திற்கு, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியரும், மற்றும் ஆண்டிமடம் வட்டம், இடையக்குறிச்சி கிராமத்திற்கு அரியலூர், மண்டல மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், அரியலூர் ஆகியோர் மேற்பார்வை அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

எனவே, அக்கூட்டத்தில், பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடர்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,நீக்கம்,முகவரி மாற்றம்,செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல்,புதிய ரேசன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Sep 2022 9:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...