/* */

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனாவை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
X

அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டர் ரத்னாவிடம்  மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கொரானா காலத்தில் விரைவாக மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில் கூறியிருப்பதாவது.,

செந்துறை,ஆன்டிமடம்,டி.பலூர்,திருமானூர் ஆகிய இடங்களில் கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்திட அரசு கல்லூரிகள் அரசு நிறுவனங்கள் சமுதாயக் கூடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் திருமண மண்டபங்களில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி ஆக்சிசன் படுக்கை வசதிகள் மூலம் சிகிச்சை தருவதால் மட்டுமே நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

மேலும் இந்த மையங்களில் சித்தா , ஹோமியோ உள்ளிட்ட மருத்துவர்களுக்கும் ஏற்பாடு செய்து நோய் பரவலை முழுமையாக கட்டுப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான ஊழியர்களைக் கொண்டு ஓபி சீட்டுகள் வழங்குவது ,

அங்கு வரும் நோயாளிகளை அமர வைப்பதற்கான இருக்கைகளை ஏற்பாடு செய்வது குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது சிடி ஸ்கேன் மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கும் இந்த வசதிகளை செய்து கொடுப்பதன் மூலம் ஓரளவுக்காவது நோய் தாக்கத்தையும் அதன் மூலம் ஏற்படும் அச்சத்தையும் களைய முடியும் .

ஆகவே இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உடனே செய்ய வேண்டும். ஸ்கேன் எடுப்பதற்கு ரூ.500/ கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யவும், ஸ்கேன் ரிப்போர்ட் 24 மணி நேரத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்திட வலியுறுத்துகிறோம்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை மாவட்ட நிர்வாகம் இலவசமாக செய்து தர வேண்டும். இதன் மூலம் நோயாளிகள் அவர்களுடைய உறவினர்கள் தேவையற்ற மன உளைச்சலுக்கும், வீன் அலைச்சலுக்கும் ஆளாகாமல் பாதுகாக்க முடியும்.

நோய் பரவல் தடுப்பு குறித்த பிரச்சாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும். இதற்காக தன்னார்வலர்களை பயன்படுத்திட வேண்டும். அப்படி அனுமதிக்கும் போது எங்கள் அமைப்புக்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட மையங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய முடியும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எங்கள் கட்சியின் சார்பில் , பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கரோனா உதவி மையம் அமைக்க உள்ளோம். இதன் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தேவையான உதவிகளை செய்து தருவதற்காக இந்த மையம் செயல்படும்.

மாநிலக்குழு உறுப்பினர் வி.சின்னதுரை, மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட செயற்குழு இளங்கோவன், மாவட்டக்குழு அருண்பாண்டியன், ஒன்றியக்குழு கிருஷ்ணன், மற்றும் கிருஷ்ணராஜ் உடன் இருந்தனர்.

Updated On: 28 May 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...