/* */

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு, அமைச்சர் சிவசங்கர் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு, அமைச்சர் சிவசங்கர் வழங்கல்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அருகில் எம்எல்ஏ சின்னப்பா, கண்ணன், கலெக்டர் ரத்னா உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரணத்தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களின் தொகுப்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள 448 நியாயவிலைக்கடைகளில் 2,37,300 தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.47,46,00,000/- வழங்கப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த நிகழச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ரத்னாமுன்னிலை வகித்தார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் தாய் தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவுத் திட்டத்தின்கீழ் 41 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் ரூ.2000/- வீதம் (ஜூலை 2020 முதல் பிப்ரவரி 2021 வரை) 8 மாதங்களுக்கு ரூ.6 இலட்சத்து 56 ஆயிரத்திற்கான காசோலையினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் .க.சொ.க.கண்ணன் , மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சந்திரசேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வ.சி.கோமதி, ஒன்றியக்குழுத்தலைவர் செந்தமிழ்செல்வி, துணைப்பதிவாளர் ஆர்.ஜெயராமன், வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 15 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?