/* */

அரியலூர்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை

அரியலூர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர்: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கை
X

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2022-2023 ஆம் கல்வி ஆண்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இம்மாவட்டத்தில் 13 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளும், 7 ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதிகளும், 1 ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஆதிதிராவிடர் நல ஐ.டி.ஐ மாணவர் விடுதியும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளுக்கு விண்ணப்பப் பதிவு 05.07.2022 முதல் 20.07.2022 வரையிலும், தேர்வுக்குழுவால் விடுதியில் தங்கும் மாணாக்கர்களை தெரிவு செய்யப்பட வேண்டிய நாள் 21.07.2022 முதல் 22.07.2022 வரை, கல்லூரி விடுதிகளுக்கு விண்ணப்பப் பதிவு 18.07.2022 முதல் 05.08.2022 வரையிலும், தேர்வுக்குழுவால் விடுதியில் தங்கும் மாணாக்கர்களை தெரிவு செய்யப்பட வேண்டிய நாள் 10.08.2022.

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணாக்கர்கள் இணைய வழியில் http://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரால் விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்படும். இவ்விடுதிகளில் தங்கி கல்விப் பயில விரும்பும் 4 ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் விடுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். (மாணவியருக்கும். பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் அல்லது தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கு மேற்படி நிபந்தனை பொருந்தாது) பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தங்களது இருப்பிடத்திற்கும்; பள்ளிக்கும் இடைவெளி 5-கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு இந்த விதி பொருந்தாது.

மாணாக்கருக்கு கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் (பள்ளி மாணாக்கருக்கு EMIS எண் மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு மத்திய, மாநில அரசால் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும்) விடுதியில் தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும் மாணாக்கர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விடுதியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக் கட்டுப்பாட்டுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள் மீது நடவழக்கை மேற்கொள்ளபடும் எனவும், மேலும் அதற்கானக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் உறுதி மொழிப்பத்திரம் பெறப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணாக்கருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணாக்கர் இல்லாத நிலையில், அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் நேர்வில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாணவ, மாணவியர்களின் சேர்க்கை 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் விடுதி மேலாண்மை அமைப்பு (Hostel Management System) என்ற செயலியின் மூலம் இணைய வழியில் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்கள் http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும், இணையவழியில் விண்ணப்பிக்கும் நடைமுறை புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதால், இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவ, மாணவியர்களுக்கு உதவிடுமாறு சம்பந்தப்பட்ட விடுதியின் காப்பாளர், காப்பாளினிகள் உதவிடுவர். எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 11 July 2022 12:22 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  7. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  8. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  9. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  10. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!