/* */

அரியலூர்: குரூப் -IVதேர்வு நாளை 25,726 தேர்வாளர்கள் பங்கேற்பு

அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4வட்டங்களில் 95 தேர்வு கூடங்களில் 25,726 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர்: குரூப் -IVதேர்வு நாளை 25,726 தேர்வாளர்கள் பங்கேற்பு
X

பைல் படம்.

இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் நாளை 24.07.2022 (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் மட்டும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களில் உள்ள 95 தேர்வு கூடங்களில் 25,726 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணிப்பதற்காக துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள், 17 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 95 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர், ஆயுதம் ஏந்திய காவலர்களும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், தேர்வு எழுத உள்ள தேர்வாளர்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்ததால் கீழ்கண்டவாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்வு காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிவரை நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு கூடத்திற்கு காலை 9.00 மணிக்குள் வர வேண்டும் 09.00 மணிக்கு மேல் தேர்வு எழுத வரும் தேர்வர்களை அனுமதிக்க இயலாது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை இணையதள பக்கத்தில் உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தை அதே இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை கண்டிப்பாக உடன் எடுத்து வர வேண்டும். தேர்வு கூடத்திற்குள் நுழையும் போதும் அறை கண்காணிப்பாளர் கேட்கும் போதும் காண்பிக்க வேண்டும். தேர்வு கூட நுழைவு சீட்டுடன் வரும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கூட வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். உடன் வரும் பெற்றோர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது.

செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட எந்த வித மின்னணு சாதனங்களையும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்கு எடுத்து வரவோ, வைத்திருக்கவோ கண்டிப்பாக அனுமதி கிடையாது. மீறி தேர்வுக் கூடத்தினுள் எந்த தேர்வரேனும் வைத்திருப்பது தெரிய வரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். தேர்வு மையத்தை, கூடத்தை மாற்றவோ, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விருப்பப்பாடத்தை மாற்றி எழுதவோ கண்டிப்பாக அனுமதியில்லை.

விண்ணப்பதாரர்களுக்கான தேர்வாணைய அறிவுரைகளை தேர்விற்கு வரும் முன் கவனமாகப் படித்துவிட்டு வரும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வாணைய அறிவுரைகளை மீறும் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணைய அறிவுரைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. தேர்வாணைத்தால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி மாவட்டம் முழுவதிலும் உள்ள தேர்வு கூடங்களில் உரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வாளர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 23 July 2022 1:42 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  6. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  7. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  8. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  9. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  10. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!