/* */

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்

2-வது டெஸ்ட் போட்டியின் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியவீரர் சாதனையை அஸ்வின்படைத்துள்ளார்.

HIGHLIGHTS

இங்கிலாந்துக்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த அஸ்வின்
X

ரவிச்சந்திரன் அஸ்வின் 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 396 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 253 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தின் உதவியுடன் 255 ரன்கள் அடித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்தியா.

இதனையடுத்து 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 3-வது நாளில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் அடித்திருந்தது. ஜாக் கிராலி 29 ரன்களுடனும், ரெஹான் அகமது 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து வீரர்களில் ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் கைப்பற்றினார்.

இதில் ஒல்லி போப் விக்கெட்டை வீழ்த்தியபோது இந்திய பந்துவீச்சாளர்கள்பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி அஸ்வின் வரலாற்று சாதனை ஒன்றை படைத்தார். அதாவது இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் பி.எஸ்.சந்திரசேகர், அனில் கும்ப்ளேவை தாண்டி முதலிடத்தை பிடித்து அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

1. அஸ்வின் - 97 விக்கெட்டுகள்

2.பி.எஸ்.சந்திரசேகர் - 95 விக்கெட்டுகள்

3.அனில் கும்ப்ளே - 92 விக்கெட்டுகள்

4. பி.எஸ்.பேடி/ கபில் தேவ்- 85 விக்கெட்டுகள்

5. இஷாந்த் சர்மா - 67 விக்கெட்டுகள்

Updated On: 5 Feb 2024 1:18 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து