/* */

திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!

‘திருச்செந்துாரில் கடலோரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்’ என்ற பாடல் வரியை போல, பக்தர்களின் மனதில் பக்தி ராஜ்ஜியம் நடத்தும் திருச்செந்துார் செந்தில் நாதன் கோவில் பற்றி அறிந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

திருச்செந்துார் செந்தில் நாதன் முருக பெருமான் பற்றி அறிவோம்!
X

திருச்செந்துார் செந்தில் நாதன் முருகன் சிறப்புகள்

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில், இரண்டாவது வீடு, திருச்செந்துார் முருகன் கோவில்.

முருகப்பெருமானுக்கு சிறப்புக்குரிய இடமாக தமிழகத்தில் ஆறு இடங்கள் உள்ளன. அவை ஆறு படைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருத்தணி ஆகியவை உள்ளன.இந்த ஆறுபடை வீடுகளில் 5 மலைகள் உள்ள பகுதியிலும், திருச்செந்தூர் கோவில் மட்டும் கடற்கரையிலும் அமைந்துள்ளது தனிச்சிறப்பானது.


திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்:

திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கின்றனர்.

திருச்செந்தூரில் வீரவாகு, காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.திருச்செந்தூர் தலத்தில், தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும். மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால், முருகன் பூஜித்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புறம் உள்ள சந்தன மலையில், தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.

திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கின்றனர். திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.


'திருச்செந்தூர் முருகனே போற்றி' என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 83-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான 'ஓம்' என்னும் வடிவில் அமைந்துள்ளது. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும்.

திருச்செந்தூர் கோவிலில் உள்ள 'சண்முக விலாசம்' என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம், 'மணியடி' எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. நாழிக்கிணறு தரைமட்டத்தில் இருந்து 24 அடி கீழே உள்ளது. இங்கு செல்ல படிகளில் இறங்கிச் செல்ல வேண்டும். இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.

Updated On: 2 Oct 2022 7:06 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?