/* */

siva vazhipadu-சிவனை வழிபட ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன படைக்கவேண்டும்..? தெரிஞ்சுக்கங்க..!

தமிழ் மாதத்தில் புரட்டாசி மாதம் சிவ வழிபாட்டுக்கு உகந்தது. வட இந்தியர்கள் சவான் மாதத்தில் சிவனை வழிபாடு செய்வது வழக்கம்.

HIGHLIGHTS

siva vazhipadu-சிவனை வழிபட ஒவ்வொரு ராசிக்காரரும் என்ன படைக்கவேண்டும்..? தெரிஞ்சுக்கங்க..!
X

siva vazhipadukal-சிவ வழிபாடு (கோப்பு படம்)

siva vazhipadu for each zodiac sign in tamil, siva vazhipadu, siva vazhipadukal, siva mantra, siva mantra on monday

ஒவ்வொரு ராசிக்காரரும் சிவனை வழிபாடு செய்யும்போது எப்படி வணங்கவேண்டும் என்று இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசியும் தனித்தன்மை வாய்ந்தது. அதனால் சிவனுக்கு எதைப் படைத்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்று தரப்பட்டுளளது. அதைப்பின்பற்றி புரட்டாசி மாதத்தில்திங்கட்கிழமைகளில் சிவனை வழிபாடு செய்யுங்கள்.

மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் சிவனை இப்படித்தான் வழிபட வேண்டும்

மகரம் - இன்று சவான் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யுங்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு நல்லெண்ணெய் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சுப நிகழ்வுகளும் நல்ல பனையும் தரும்.

மீனம்- பாலில் குங்குமம் கலந்து கடவுளுக்கு அபிஷேகம் செய்து, மஞ்சள் சந்தன திலகம் பூசி, மஞ்சள் பூக்கள் மற்றும் பழங்களை சமர்ப்பிக்கவும்.


துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் இவற்றை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

துலாம் ராசிக்காரர்கள் சிவலிங்கத்துக்கு தயிர், வாசனை திரவியம் மற்றும் கரும்புச் சாறு கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும். சிவபெருமான் உங்கள் விருப்பத்தை விரைவில் நிறைவேற்றுவார்.

விருச்சிக ராசிக்காரர்கள் பஞ்சாமிர்தம் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்யவேண்டும்.

தனுசு ராசிக்காரர்கள் பசும்பாலில் குங்குமம் மற்றும் வெல்லம் கலந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். சந்தனத்தைப் பூசி மஞ்சள் பூக்களை சமர்ப்பணம் செய்யுங்கள்.

கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் இவற்றை சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்

கடக ராசிக்காரர்கள் - இந்நாளில் சிவபெருமானுக்கு பால், தயிர், நெய், கங்கை நீர், சர்க்கரை மிட்டாய் ஆகியவற்றை படைத்து அபிஷேகம் செய்தல் வேண்டும். சிவன் கோவிலில் வெள்ளைப் பொருட்களை தானம் செய்யவும்.

சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு நீரில் வெல்லம் கலந்து அபிஷேகம் செய்வது ஐதீகம். சிவனுக்கு சுத்தமான பசு நெய்யில் அபிஷேகம் செய்வது சிறந்த பலனைத் தரும்.

கன்னி ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு கரும்புச்சாறில் அபிஷேகம் செய்துவர சுப பலன்கள் கிடைக்கும். பால், தேன், வில்வ இலைகள், எருக்கம்பூ ஆகியவற்றை வழங்குவதும் சிறப்புக்குரியது.


மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிக்காரர்கள் சாவான் திங்கட்கிழமையில் இப்படி வழிபட வேண்டும்

மேஷ ராசிக்காரர்கள் தண்ணீரில் வெல்லம் கலந்து சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். வில்வ இலையில் சந்தனத்தால் ராமரின் பெயரை எழுதி சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்யுங்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் சிவலிங்கத்தின் மீது பால், தயிர் மற்றும் பாரிஜாத மலர் மாலையுடன் அபிஷேகம் செய்த பிறகு, சந்தனத்துடன் திருநீறு பூசவும்.

மிதுனம் ராசிக்காரர்கள் சிவனுக்கு கரும்புச் சாற்றில் அபிஷேகம் செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். இது தவிர சிவபெருமானுக்கு தேன் கொண்டு ருத்ராபிஷேகம் செய்யவும்.

Updated On: 10 July 2023 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு