/* */

திருமண பொருத்தத்தில் நாடி பொருத்தம் அவசியமா..? தெரிஞ்சுக்கங்க..!

Naadi Porutham-திருமண பொருத்தம் பார்க்கும்போது 10 பொருத்தத்தில் நாடி பொருத்தம் அவசியமா என்பதை பார்ப்போம் வாங்க.

HIGHLIGHTS

Naadi Porutham
X

Naadi Porutham

Naadi Porutham

ஆணோ, பெண்ணோ பூமியில் பிறந்தவுடனேயே அவர்களின் ஜாதகம் நிர்ணயம் செய்யபட்டுவிடும். அதே போல அவர்களின் ஏழாமிடமும் நிர்ணயம் செய்யப்பட்டுவிடும். ஏழாமிடம் நிர்ணயம் செய்யப்படும்போதுதான் அவர்களின் திருமண வாழ்க்கை உறுதி செய்யப்படுகிறது.

நம் முன்னோர்கள் வேத சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, ராசி, நட்சத்திரங்களை உள்வாங்கி அதன் அடிப்படையில் பொருத்தங்களை கணித்து வரையறை செய்கின்றனர். பிறந்த நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு ஆண் மற்றும் பெண்ணின் குணநலன்களை ஆராய்ந்து பொருத்தங்கள் கணக்கிடபடுகிறது. நம் முன்னோர்கள் கடைபிடித்த இந்த மரபுகள் ஆண்டவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்டது ஒரு கணித சாஸ்திரம் ஆகும். பண்டைய காலத்தில் 20 பொருத்தங்கள் வரை பார்த்த நிலையில் இன்றைய காலகட்டத்தில் பத்து பொருத்தங்கள் மட்டும் பார்க்கப்படுகிறது.

10 பொருத்தங்கள்:

தினப் பொருத்தம் - Dina Porutham

கணப் பொருத்தம் - Gana Porutham

மகேந்திர பொருத்தம் - Mahendra Porutham

ஸ்ரீ தீர்க்க பொருத்தம் - Sree Dheerga Porutham

யோனி பொருத்தம் - Yoni Porutham

ராசி பொருத்தம் - Rasi Porutham

ராசியாதிபதி பொருத்தம் - Rasiyathipathi Porutham

வசிய பொருத்தம் - Vasiya Porutham

ரஜ்ஜி பொருத்தம் - Rajji Porutham

வேதை பொருத்தம் - Vethai Porutham

மேலும் இரண்டு முக்கிய பொருத்தங்கள்:

நாடி பொருத்தம் - Nadi Porutham

மர (அ) விருட்ச பொருத்தம் - Virutcha Porutham

இந்த பத்து பொருத்தங்களில் மிகவும் முக்கியமாக தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜி, வேதை ஆகிய ஆறு பொருத்தங்கள் மிகவும் முக்கியம். சிலர், தினம், கணம் ஆகியவற்றில் ஒன்றும், மகேந்திரம், ராசி, நாடி ஆகியவற்றில் ஒன்றும், ரஜ்ஜி, வேதை யோனி ஆகிய மூன்றும் இருந்தால் மட்டும் போதும் என்று திருமணம் செய்கின்றனர்.

அனைத்து பொருத்தங்களைக் காட்டிலும் ரஜ்ஜி பொருத்தம் என்பதே மிகவும் முக்கியமானது. ரஜ்ஜு பொருத்ததில் பல வகைகள் உள்ளன. அவற்றை முழுமையாக பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டும்.

ஆண் மற்றும் பெண் இருவரின் லக்னத்தை வைத்து அவர்களுக்கு லக்ன பொருத்தம் பார்க்கபடுகிறது, 4, 6, 8, 12 ம் லக்னமாக இருவருக்கும் வந்தால் பொருத்தம் இல்லை. இந்த பத்து பொருத்தம் என்பது அடிப்படை பொருத்தம் மட்டும் தான். ஆண், பெண் இருவரின் முழு ஜாதகம், குறிப்பாக ஏழாம் வீடு, களத்திற காரகன், தசா புத்திகள் ஆகிய அனைத்தும் பார்த்து திருமணம் செய்தால் தான் சிறப்பு.

நாடி பொருத்தம்:

தற்போது முக்கியமாக பார்க்கப்படும் பொருத்தமாக நாடி பொருத்தம் உள்ளது, ஆண் பெண் இருவருக்கும் உள்ள ரத்த ஒற்றுமையை குறிக்கும் பொருத்தமாக நாடி பொருத்தம் உள்ளது, இந்த பொருத்தம் மணமக்களுக்கு அமைந்தால் புத்திர பாக்கியம் உறுதி. அந்த காலத்தில் நாடியை வைத்தே எந்த வகையான உடம்பு என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு உடலை நோய்நொடி இல்லாமல் பார்த்து வந்தனர்.

பொதுவாக நாடி மூன்று பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, ஆண் மற்றும் பெண் இருவருக்கும் ஒரே நாடியாக இருந்தால் பொருத்தம் கிடையாது, வெவ்வேறு நாடியாக இருப்பின் பொருத்தம் உண்டு. சூடு உடம்பிற்கு சூடு உடம்பு இணைத்தால் குழந்தை பாக்கிய பிரச்சனை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

பார்சுவ எனப்படும் வாத நாடி:

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்தரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்

மத்தியா நாடி எனப்படும் பித்த நாடி:

பரணி, மிருகசீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள்

சமான நாடி அதாவது சிலேத்தும நாடி:

கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்ராடம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள்

கணவன்,மனைவி நடத்தும் குடும்ப வாழ்க்கை காரணமாக உடலில் நோய்நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ இந்த பொருத்தம் தேவை. உடலில் உள்ள சத்துக்கள், ரத்தம், சூடு, குளிர்ச்சி, போன்ற விசயங்களை கொண்ட பொருத்தம் என்பதால் இது அவசியம் பார்க்க வேண்டிய பொருத்தம். இந்த பொருத்தம் முந்தைய காலத்தில் நமது முன்னோர்களால் பார்த்த மிகவும் முக்கிய பொருத்தமாகும். இது10 பொருத்ததில் வராமல் இருந்தாலும் கூட அவசியம் பார்க்க வேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 March 2024 6:49 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...