/* */

உத்தரவு பெட்டியில் துளசி.அருகம்புல். வேப்பிலை.மஞ்சள்பொடிவில்வம்.விபூதி

மருத்துவ குணம் உள்ள பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் தற்போது மிரட்டி வரும் வைரஸ் தொற்று படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது

HIGHLIGHTS

உத்தரவு பெட்டியில் துளசி.அருகம்புல். வேப்பிலை.மஞ்சள்பொடிவில்வம்.விபூதி
X

சிவன்மலை ஆண்டவர் கட்டளை: உத்தரவு பெட்டியில் துளசி. அருகம்புல். வேப்பிலை. மஞ்சள் பொடி.வில்வம்.விபூதி என 6 பொருட்கள் வைத்து பூஜை!

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இப்போது வைக்கப்பட்டுள்ள பொருள் துளசி. அருகம்புல். வேப்பிலை. மஞ்சள் பொடி.வில்வம்.விபூதி என 6 பொருட்கள் வைத்து பூஜை நடைபெறுகிறது. ஒரே பொருள் மட்டுமே வைத்து பூஜை செய்யப்படும் உத்தரவு பெட்டியில் இப்போது 6 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. சிவன்மலை ஆண்டவர் கட்டளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமாகவே இருக்கிறது.


அதென்ன உத்தரவு பெட்டி, ஆண்டவர் கட்டளை எப்படி பக்தர்களுக்கு தெரியும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன கதை சொல்றேன். அதை சொன்னால்தான் புரியும். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில். மலை மீது உள்ள கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது.

உத்தரவு பெட்டியில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சிலருக்கு கனவில் தோன்றும். தனக்கு வந்த கனவு பற்றி கோவிலுக்கு வந்து நிர்வாகிகளிடம் பக்தர் கூறினால், சுவாமியிடம் பூ கேட்டு, அதில் வெள்ளைப் பூ வந்தால் பக்தர் சொன்னது உண்மை என்பது நிச்சயமாகும். இதனையடுத்தே பக்தர் சொன்னதை உத்தரவுப் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள்.

சிவன்மலை முருகன்கோவிலில் ஆண்டவர் உத்தரவு என்ற பெயரில் கண்ணாடி பெட்டியில், ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புபூஜை செய்யப்படுவது வழக்கம். இது 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மண், துப்பாக்கி, ஏர்கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டு புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை என 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கோயில் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்தது. இதனால் நாட்டில் என்ன நடக்கப் போகின்றது என அது பற்றி அப்போது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் சில நாட்களிலேய தமிழகத்தில் மக்களின் மனங்களில் மாறாத வடுவை ஏற்படுத்திய பேரழிவு அரக்கன் என்ற சுனாமி வந்து அப்பாவிகள் பலர் உயிரையும் பலிவாங்கிவிட்டது. அப்போது தான் இந்த பெட்டியில் உள்ள பொருளுக்கு மதிப்பு இன்னும் அதிகமானது.

மஞ்சள் வைத்து கோயிலில்பூஜை செய்தனர். முன்பு காட்டில் சும்மா கிடந்த மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரும்பு சங்கிலி உத்தரவானது. இதையடுத்து ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்பட்டது. இரும்பு சங்கலி வைத்து பூஜை செய்யப்படுவதால், சட்டத்தை மீறுபவருக்கும், குற்றம் செய்பவர்களுக்கு காப்பு கிடைப்பது நிச்சயம் என்று கூறப்பட்டது. சசிகலாவும் அவரது உறவினர்களும் சிறைக்கு போனார்கள்.

கடந்த ஜனவரி மாதம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மலர்விழி என்ற பெண் பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வைக்க உத்தரவாகி உள்ளது. இதனையடுத்து கணக்கு நோட்டு வைத்து பூஜைக்கப்பட்டது. இதனால் ஜிஎஸ்டி வரிமுறை கடுமையானது. பினாமி சொத்துகள் மீட்கப்படும் என்று பரவலாக பேசப்பட்டது. வருமான வரித்துறையினரின் அதிரடி ரெய்டுகள் நடைபெற்றன.

கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் எதுவும் இல்லாமல், இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரையில், பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இன்றிலிருந்து .துளசி. அருகம்புல். வேப்பிலை. மஞ்சள் பொடி.வில்வம்.விபூதி என 6 பொருட்கள் வைத்து பூஜை நடைபெறுகிறது.

இது குறித்து சிவாச்சாரியர்கள் கூறும்போது மருத்துவ குணம் உள்ள பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் தற்போது மிரட்டி வரும் வைரஸ் தொற்று படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.


நாட்டில் நடப்பதை முன்கூட்டியே மக்களுக்கு சொல்லும் சிவன்மலை ஆண்டவரின் உத்தரவு பெட்டி பற்றி இன்றைக்கும் அதிசயமாக பேசிக்கொள்கின்றனர் திருப்பூர், கோவை மாவட்ட மக்கள்.

Updated On: 18 May 2021 11:57 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  2. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  3. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  4. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  5. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  9. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  10. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...