/* */

தமிழக காங்கிரஸ் தலைவர் விரைவில் மாற்றம்: பதவியைப் பிடிக்க கடும் போட்டி?

tamilnadu cong.president to be changed shortly காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டிதான். தமிழகத்தில் மட்டும் பல கோஷ்டிகள் உள்ளது. இதனையும் மீறி தலைவரானவர் தாக்குப்பிடிக்க வேண்டும். புதிய தலைவர் தாக்குப் பிடிப்பவராக நியமிக்குமா?

HIGHLIGHTS

tamilnadu cong.president to be changed shortly



டில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் (கோப்பு படம்)

tamilnadu cong.president to be changed shortly

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அழகிரி விரைவில் மாற்றம் செய்யப்படுவார் என அழகிரிக்கு எதிரான கோஷ்டியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். குஜராத் சட்டசபை தேர்தல் முடிவானது வரும் 8ந்தேதி வெளியாகிறது. அதன்பின்னர் இந்த முடிவு குறித்து காங். தலைமை அறிவிக்கும் என்ற எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் யார் காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தலைவராக வந்தாலும் அவர்களுடைய 3 ஆண்டுகாலத்தினை முழுவதுமாக முடிப்பதில்லை. ஆனால் கே.எஸ். அழகிரி கடந்த 2019 ம் ஆண்டு பிப்ரவரி 2 ல் நியமிக்கப்பட்டு இன்று வரை தொடர்கிறார். காங்கிரஸ் என்றாலே கோஷ்டி கானம்தான் எப்போதும் ஒலிக்கும். இதனால்தான் தமிழகத்தில் அக்கட்சியானது நிலையான இடத்தினைப் பெற முடியவில்லை. அக்கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் இதே நிலைதான். அப்போதும் இவர்களிடம் ஒற்றுமை இல்லை. இதுபோல் மாற்றி மாற்றி புகார் சொல்லியே கட்சியை கட்டுக்கோப்பில்லாமல் விட்டுவிட்டனர். இதனால் மக்களிடையே காங்கிரஸ் கட்சி மீதிருந்த நம்பிக்கையில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், உள்ளிட்டோரும், மாணிக்தாகூர், ஜோதிமணி, விஜயதரணி, கார்த்தி சிதம்பரம் செல்லக்குமார் ஆகியோரும் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

tamilnadu cong.president to be changed shortly


தமிழக காங்கிரஸ் கட்சித்தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவன் (கோப்பு படம்)

tamilnadu cong.president to be changed shortly

அதேபோல் தேர்தல் என்றாலே திமுகவின் முதுகில் மேல் சவாரி செய்வது என்ற நிரந்தர கொள்கையினை காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ளனர். தனித்து நின்று வெற்றி வாகை சூடும் தைரியம் யாருக்கும்இல்லை என்பது போல் கட்சியின் செயல்பாடுகள் இருந்ததால் பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த நம்பிக்கையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மைதான்.


கே.எஸ் அழகிரிக்கு முன்பு தமிழகத்தில் காங். தலைவராக இருந்த இளங்கோவன திருநாவுக்கரசர், தங்கபாலு ஆகியோர் கோஷ்டிப்பூசலால்தான் தங்களுடைய 3 ஆண்டு கால பதவிக்காலத்தினை முழுவதுமாக நிறைவேற்ற முடியவில்லை. தற்போது அழகிரி 4 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஒன்பது தொகுதியில் போட்டியிட்டது. அதில் 8 இடங்களில் வெற்றி வாகை சூடியது. அதேபோல் 2021 சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றதால் கட்சித்தலைவர் பதவியில் இருந்து அழகிரியை மாற்ற கோஷ்டி கானம் பாடினாலும் தலைமை அதனைப்பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை.

கடந்த மாதம் 15ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடந்த மாவட்ட தலைவர்களின் கூட்டத்தில் அழகிரியை மாநில பொருளாளரும் எம்.எல்.ஏ வுமான ரூபி மனோகரன் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு பெரும் போராட்டம் நடத்தியதால் இரு கோஷ்டிகளுக்கும் அடிதடி கலாட்டா நடந்தது.

இதனால் ரூபி மனோகரனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தினமே அந்த சஸ்பெண்ட் செல்லாது என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிவித்ததால் பரபரப்பானது.

tamilnadu cong.president to be changed shortly

பின்னர் சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மற்றும் முன்னாள் தமிழக காங்.தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் டில்லிக்கு நேரிடையாக சென்று அகில இந்திய காங்.தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


அதே நேரத்தில் சட்டசபை காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் 10 எம்எல்ஏக்கள் டில்லியில் கார்கேவைச் சந்தித்து ரூபி மனோகரனுக்கு எதிராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்ததை செயல்பாடுகள் குறித்தும் புகார் தெரிவித்தனர்.

தற்போது தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் நான்காண்டுகள் ஆகிவிட்டதால் விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும், டிச. 8 ந்தேதி நாளை குஜராத் சட்டசபை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என அழகிரியின் எதிர்கோஷ்டியினர் காத்துள்ளனர்.

இதுமட்டும் அல்லாமல் நவம்பர் 16 ந்தேதி நடந்த சம்பவத்தின் எதிரொலியாக அழகிரியின் எதிர்கோஷ்டியினர் இன்று வரை சத்தியமூர்த்தி பவன் பக்கம் தலைகாட்டவே இல்லை. அனைத்துநிகழ்ச்சிகளையும் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

tamilnadu cong.president to be changed shortly

கடும்போட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், உள்ளிட்டோரும், மாணிக்தாகூர், ஜோதிமணி, விஜயதரணி, கார்த்தி சிதம்பரம் செல்லக்குமார் ஆகியோரும் தலைவர் பதவியைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

டிசம்பர் 8 ந்தேதியான நாளை குஜராத், இமாச்சல சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வெளியாக உள்ளது. இது முடிந்த பின் காங். தலைமை தமிழக தலைவர் முடிவு குறித்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவரே நீடித்தால் போராட்டம்தான்வெடிக்கும் எனவும் எதிர்கோஷ்டியினர் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 5 ந்தேதி நடந்து முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. மேலும் அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தமிழகநிர்வாகிகளிடம் யாரைத் தலைவராக தேர்ந்தெடுக்கலாம் எனஒவ்வொருவரும் 5 பேரின் பெயரை எழுதி அனுப்பும்படி வேண்டுகோள்விடுத்துள்ளதை வைத்து பார்க்கும்போது நிச்சயம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறார் என்பது உறுதியா? என்ற நிலையில் உள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றபோது மூத்த பாஜ நிர்வாகி ஒருவர் காங்கிரசை கூட்டணியில் இருந்து கழற்றிவிடச் சொன்னது என்னாச்சு? என கேட்டதாகவும் தகவல் பரவி வருவதால் கூட்டணி காங்கிரசுடனா? அல்லது பாஜ திமுகவோடு கூட்டணி சேருமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்களிடையே நிலவி வருகிறது. எது எப்படி இருந்தாலும் அரசியல்னா...இதெல்லாம் சகஜம்பா...என சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லையே...கை சின்னத்தினைத் துாக்கிப் பிடிக்க தலைமை யாருக்கு பதவி தரப்போகிறது?

Updated On: 7 Dec 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு