/* */

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனுக்கு கடுமையான நெருக்கடி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தொல்.திருமாவளவனுக்கு கடுமையான நெருக்கடி
X

தொல். திருமாவளவன்.

ஆன்மீக தலமான சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 6-வது முறையாக களம் காண்கிறார். ஏற்கனவே 2 முறை வென்ற திருமாவளவன், 3-வது வெற்றிக்காக போராடுகிறார்.

குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸ் 5 முறை வென்றுள்ளது. திமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 3 முறை, அதிமுக 2 முறை, விசிக 2 முறை வென்றுள்ளது.

சிதம்பரம் தொகுதி வாக்காளர்கள்: 15,10,915; ஆண்கள்- 7,49,623; பெண்கள்- 7,61,206; 3-ம் பாலினத்தவர் 86

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தொல். திருமாவளவன்(விசிக) 4,28,804 பொன்னுசாமி(பாமக) 3,29,721 சசிகுமார்(தேமுதிக) 66,283

2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் சந்திரகாசி(அதிமுக) 4,29,536 திருமாவளவன்(விசிக) 3,01,041 சுதா(பாமக) 2,79,016 வள்ளல் பெருமான்(காங்கிரஸ்) 28,988

2019 தேர்தல் முடிவு

திருமாவளவன்(விசிக) 5,00,229 சந்திரசேகர்(அதிமுக) 4,97,010 இளவரசன் (அமமுக) 62,308 சிவஜோதி(நாம் தமிழர் கட்சி) 37,471 2024-ல்

தற்போது களம் காணும் வேட்பாளர்கள்

திருமாவளவன் (விசிக) சந்திரகாசன் (அதிமுக) கார்த்தியாயினி (பாஜக) ஜான்சி ராணி (நாம் தமிழர் கட்சி) சிதம்பரம் கள நிலவரம் என்ன? என்பதை இனி பார்ப்போமா?

கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களின் தொகுதிகளை உள்ளடக்கியது சிதம்பரம். இத்தொகுதியில் 35% வன்னியர்கள்; தலித்துகள் 31%. மூப்பனார், உடையார், முதலியார், ரெட்டியார், பிள்ளைமார், யாதவர்களும் உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மொத்தம் 6% உள்ளனர். சிதம்பரம் லோக்சபா தொகுதியில் 6-வது முறையாக களம் காண்கிறார் ஏற்கனவே 2 முறை வென்ற தொல். திருமாவளவன். திமுகவின் வாக்கு பலத்தை முழுமையாக நம்புகிறார் திருமாவளவன். அதிமுக வலிமையான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. பாமகவை நம்புகிறது பாஜக. கொள்ளிடம் தடுப்பணை, முந்திரி தொழிற்சாலை ஆகியவை நீண்டகால பிரச்சனை. சிதம்பரம், காட்டுமன்னார் கோவிலில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தேவை என்பதும் தொடர் கோரிக்கை. சிதம்பரத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்பதும் நீண்டகாலமாக வலியுறுத்தப்படும் கோரிக்கைதான். பல்வேறு ரயில் திட்டங்களையும் எதிர்பார்க்கின்றனர் தொகுதி மக்கள்.

Updated On: 16 April 2024 11:43 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?