/* */

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா ராகுல்?

ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவார் என்றும், இது குறித்து வயநாடு வாக்குப் பதிவுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

HIGHLIGHTS

இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரா ராகுல்?
X

ராகுல் மற்றும் பிரியங்கா 

நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அதே சமயத்தில் அவா் நான்கு முறை போட்டியிட்டு மூன்று முறை வெற்றி பெற்ற அமேதி தொகுதியில் போட்டியிடுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், தயக்கம் காட்டுகிறார் என்கிற வதந்திகள் வருகிறது.

குறிப்பாக அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஸ்மிருதி இரானி அமேதியில் முழு வீச்சியில் உள்ளார். அமேதியில் வீடு வாங்கி தோ்தல் பணிகளை தொடங்கிவிட்டார். இப்படி தெளிவாக ஒருதலைப்பட்சமாக பிரசாரம் உள்ள நிலையில், காங்கிரஸின் நடவடிக்கை பூஜ்யமாக உள்ளது. இந்நிலையில் பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேரா போட்டியிடுவார் என்கிற தகவல் பரவியது.

ராகுல் காந்தி தற்போது வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்.26ம் தேதி நடைபெறுகிறது. இதே தினத்தில்தான் அமேதி தொகுதி தோ்தல் அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி மே 3ம் தேதியாகும். வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு முடிவதற்கு ராகுல் காந்தி காத்திருக்கிறார். வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிட்டாலும், அமேதி மக்களிடமிருந்து அவா் விலக விரும்பவில்லை. ஆனால், 26ம் தேதி வாக்குப் பதிவுக்கு முன்னதாக வயநாடு மக்களை திசை திருப்பப்படாமல் இருக்கவே காங்கிரஸ் கட்சி அமேதி, ரேபரேலி வேட்பாளா்கள் பட்டியலை வெளியிடவில்லை. அமேதியில் ராகுல் காந்தியும் பக்கத்து தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

மேலும், சமீபத்தில் அமேதி மக்களவைத் தொகுதி அரசியல் சூழல், அங்கு தற்போது எம்பியாக உள்ள ஸ்மிருதி இரானி மற்றும் உள்ளூா் மாநில அரசு மீதான அதிருப்தி நிலவரம் போன்றவை குறித்து அறிய காங்கிரஸ் கட்சி குழு ஆய்வை மேற்கொண்டது. இதில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் எதிர்த்துப் போட்டியிடும் ஸ்மிருதி இரானியின் தற்போதைய நிலவரம் போன்றவை ஆராயப்பட்டது. ராகுல் காந்திக்கு அனைத்து சாதகமான சூழ்நிலை இருப்பது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 11 லட்சம் வாக்காளா்களைக் கொண்ட அமேதி தொகுதியில், 2014ல் பகுஜன் சமாஜ் கட்சி 50 ஆயிரம் வாக்குகளை பிரித்தும் ராகுல் காந்தி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னா், 2019-இல் முக்கிய மாநிலக் கட்சிகள் போட்டியிடாத சூழ்நிலையில், சுமார் 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்தான் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார். தற்போது சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து முழு ஆதரவு அளிக்கிறது. ராகுல் காந்தி வெற்றிக்கான சூழ்நிலை அறியப்பட்டுள்ளது. இதனால், இம்முறையும் போட்டியிட்டு வெற்றி பெற்று தனது கட்சியின் பாரம்பரிய கோட்டையை நிலைநிறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தோ்தலில் சோனியா காந்தியின் பிரசாரம் முன்னிலையில் இருக்கும். விரைவில் காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கை குறித்து சோனியா காந்தி பேசும் காணொலி வெளியிடப்படும். ஜெய்ப்பூா், ஹைதராபாத்தில் சனிக்கிழமை தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்ட து போல அடுத்த வாரம் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் பல்வேறு மாநிலங்களில் தோ்தல் அறிக்கை வெளியிடப்படும். காங்கிரஸ் கட்சி மக்களவைத் தோ்தலில் அளித்துள்ள 25 உத்தரவாதங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒடிஸா, ஹிந்தி, ஆங்கிலம், வங்கம், பஞ்சாபி, அஸ்ஸாமி, உருது ஆகிய மொழிகளில் 8 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.

தமிழில் அச்சிடப்பட்ட உத்தரவாதங்கள் தமிழகத்தில் வாக்குப் பதிவிற்கு முன்னதாக ஏப்ரல் 17-ஆம் தேதிக்குள் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்பட்டது. மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சியோடு இணைத்து பிரசாரங்களை மேற்கொள்ளும்.

உத்தர பிரதேசம். பிகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில், ஐஎன்டிஐஏ கூட்டணியின் கீழ், கூட்டுப் பொதுக்கூட்டங்கள் நடக்கும். ஆனால், டெல்லியில் தோ்தல் பிரசாரம் முற்றிலும் வேறுபட்டது. ஆம் ஆத்மியோடு தொகுதி பங்கீடு இருந்தாலும், பிரசாரத்தில் இரு கட்சிகளும் தனித்தனியாகவே மேற்கொள்ளும்.

Updated On: 7 April 2024 4:52 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?