/* */

கொலம்பியா முதல்வர் பதவிக்கு மதுரை தமிழ்ப்பெண் போட்டி

Election News in Tamil - கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா முதல்வர் பதவிக்கு தமிழகத்தை, அதுவும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அப்பாதுரை என்ற பெண் போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

கொலம்பியா முதல்வர் பதவிக்கு   மதுரை தமிழ்ப்பெண் போட்டி
X

அஞ்சலி அப்பாதுரை (பைல் படம்)

Election News in Tamil -வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கனடாவில் 10 மாகாணங்கள் உள்ளன. ஒவ்வொரு மாகாணத்திற்கும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. 2017 பேரவைத் தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றது. அந்த மாகாணத்தின் முதல்வராக ஜான் ஹோர்கன் (62) உள்ளார். புற்றுநோய் காரணமாக கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக உள்கட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண வீட்டு வசதி, சட்டத்துறை அமைச்சர் டேவிட் எபி (46) போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தமிழகத்தை அதுவும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட அஞ்சலி அப்பாதுரை (32) களமிறங்கியுள்ளார். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

நவம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைமுறை தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்படுபவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வராக பதவியேற்பார். வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அவரே முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார்.

யார் இந்த அஞ்சலி?

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி அப்பாதுரை, தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர். அவருக்கு 6 வயது இருக்கும்போது பெற்றோர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர்.

அவரது குடும்பம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குக்குவிச்சி நகரில் வசிக்கிறது. சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கிய அஞ்சலி, அரசின் கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்காவின் மெய்னி மாகாணம், பார் ஹார்பர் நகரில் செயல்பட்டு வரும் காலேஜ் ஆப் அட்லாண்டிக் கல்லூரியில் சர்வதேச அரசியல் மற்றும் பருவநிலை கொள்கை பாடத்தில் பட்டம் பெற்றார். சுற்றுச்சூழலில் அதிக ஆர்வம் கொண்ட அஞ்சலி, ஐ.நா. சபை உள்பட பல்வேறு சர்வதேச அரங்குகளில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்.

அஞ்சலி அப்பாதுரை சுற்றுச்சூழல், அரசியல் மட்டுமன்றி இசை, சல்சா நடனத்திலும் அதிக ஆர்வம்கொண்டவர். பல்வேறு இசை ஆல்பங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 Sep 2022 3:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  5. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  6. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  7. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  8. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  9. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  10. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி